ஆல் இந்தியன்ஸ் அடிச்சு தூக்குங்க.. 200MP லுமோ கேமரா, 6500mAh பேட்டரி.. நச் விலையில் புது OPPO போன்!
ஒப்போ நிறுவனம் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி அன்று தனது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஆனாலும் பெரும்பாலானவர்களின் கவனம் ஒப்போ ரெனோ 15 சீரீஸ் (Oppo Reno 15 Series) ஸ்மார்ட்போன்கள் மீதுதான் உள்ளது.
இது 2025 நவம்பர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்படவும், அதை தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்பாக வெளியான ரெனோ சீரீஸில் ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ என்கிற 2 மாடல்கள் இருந்திருந்தாலும், இந்த முறை ரெனோ 15 சீரிஸில் 3 மாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்பிரிக்ஸின் புதிய அறிக்கையின்படி, இந்த சீரீஸின் டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் (Oppo Reno 15 Pro Max) என்று அழைக்கப்படும். ஆக ரெனோ 15 சீரீஸின் கீழ் ரெனோ 15 மற்றும் ரெனோ 15 ப்ரோ உடன் சேர்த்து ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 1ஹெர்ட்ஸ் முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் பிளாட் ஓஎல்இடி எல்பிடிஓ டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
சிப்செட்டை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 9400 சிப்செட்டால் இயக்கப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஆண்டு அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்8வி மற்றும் பைண்ட் எக்ஸ்8 ப்ரோ ஆகிய மாடல்களில் இருந்த அதே சிப்செட் ஆகும்.
அனைவரும் எதிர்பார்க்கும்படியே ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படத் திறன்கள் அதன் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். இதில் லுமோ இமேஜிங் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கேமரா அமைப்புடன் - ஓஐஎஸ் ஆதரவு கொண்ட 200 மெகாபிக்சல் சாம்சங் எச்பி5 ப்ரைமரி கேமரா இடம்பெறலாம்.
கூடவே 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவைகளும் பேக் செய்யப்படலாம். முன்பக்க கேமராவை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம். ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 உடன் அனுப்படலாம். கடைசியக இது 6,500mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் இந்திய அறிமுகம் எப்போது நடக்கும்? ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் ஆனது மற்ற ரெனோ 15 மாடல்களுடன் இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட உலகளாவிய வெளியீடு ஆனது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.55,000 ஆக இருக்கலாம்.
முன்னதாக, ஸ்மார்ட் பிக்காச்சு என்கிற டிப்ஸ்டர் வழியாக கிடைத்த ஒரு லீக் தகவல் - இதே ஒப்போ ரெனோ 10 சீரிஸில் ஒரு 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இருக்கும் என்று பரிந்துரைத்தது. கூடவே அந்த மாடலில் பெரிஸ்கோப் லென்ஸ் உடனான 200 மெகாபிக்சல் கேமரா இருக்கும் என்றும் கூறியது. பெரும்பாலும் அது ப்ரோ மேக்ஸ் மாடலாகத்தான் இருக்கும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன,
ஆனால் தற்போது கிடைத்துள்ள லீக்கில் 10000எம்ஏஎச் பேட்டரி என்கிற வார்த்தையை கூட பார்க்க முடியவில்லை. ஆனால் 200எம்பி கேமரா குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் அது பெரிஸ்கோப் லென்ஸ் உடன் வரும் என்பது குறித்த விவரங்கள் இல்லை. ஆக நமக்கு கிடைக்கும் எல்லா லீக்ஸ் தகவல்களையும் "மேலோட்டமாக" எடுத்துக்கொள்வதே நல்லது.


Click it and Unblock the Notifications