Home
Mobile

OPPO ஒரே போடு.. 200MP கேமராவுடன் கம்பெனியின் முதல் மினி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ஒப்போ (OPPO) நிறுவனமானது பேக்-டூ-பேக் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் மாடல்களின் உலகளவிய அறிமுகத்தை தொடர்ந்து, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) ஆகிய மாடல்கள் இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில் ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 15 சீரீஸை (OPPO Reno 15 Series) இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. ஆக டிசம்பர் மாத இறுதிக்குள் இது இந்தியாவில் அறிமுகமாகும். இன்ட்ரெஸ்டிங் ஆன மேட்டர் இதுவல்ல - ஒப்போ ரெனோ 15 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளமினி ஸ்மார்ட்போன் (Mini Smartphone) தான்!

OPPO: 200MP கேமராவுடன் கம்பெனியின் முதல் மினி ஸ்மார்ட்போன்!

முன்னதாக ரெனோ 15 சீரீஸின் கீழ் ரெனோ 15 (Oppo Reno 15) மற்றும் ரெனோ 15 ப்ரோ (Oppo Reno 15 Pro) ஆகிய 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த சீரிஸின் கீழ் ஒப்போ ரெனோ 15 மினி (Oppo Reno 15 Mini) என்கிற மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

​​டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Sudhanshu Ambhore) மற்றும் 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, ஒப்போ ரெனோ 15 சீரீஸின் கீழ் 6.31 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட ரெனோ 15 மினி மாடல் அறிமுகமாகும். இது 6.59 இன்ச் டிஸ்பிளே கொண்ட ரெனோ 15 மற்றும் 6.78 இன்ச் டிஸ்பிளே கொண்ட ரெனோ 15 ப்ரோ ஆகிய மாடல்களுடன் சேர்ந்து அறிமுகமாகும்.

சிப்செட்டை பொறுத்தவரை ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே டைமன்சிட்டி 8450 சிப்செட் (Dimensity 8450 chipset) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ 15 ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பிற அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

கேமராக்களை பொறுத்தவரை ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் ரியர் கேமரா அமைப்பில் 200 மெகாபிக்சல் சாம்சங் எச்பி5 பிரைமரி கேமராவும் (200 megapixel Samsung HP5 Main Camera), அல்ட்ரா-வைட் மற்றும் பெரிஸ்கோப் ஜூம் கேமராக்களுக்கான 50 மெகாபிக்சல் சென்சார்களும் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்பீக்களுக்கு, இரண்டு மாடல்களிலும் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம். மேலும் முழு ஒப்போ ரெனோ 15 சீரீஸும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) உடன் இயங்கும். ​​ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் குறித்து எந்த தகவலும் இல்லை. ப்ரோ வேரியண்ட்டில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு (Wireless Charging Support) இருக்கலாம்.

2025 டிசம்பர் மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஜனவரி 2026 முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ஆனது 39,990 க்கும், ரெனோ 15 ப்ரோ மாடல் ரூ.49,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். மினி மாடலின் விலை இரண்டிற்கும் இடையே நிலைநிறுத்தப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15 Mini With 6 31 inch display 200MP Camera Could Launch in December in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X