Home
Mobile

ஜனவரி 2026 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. வந்துட்டான் OPPO.. Mini போன் உட்பட 3 புதிய 5ஜி போன்கள்!

ஒருவழியாக ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் ஒப்போ ரெனோ 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ரெனோ 15 ப்ரோ, ரெனோ 15 ப்ரோ மினி மற்றும் ரெனோ 15 ஆகிய 3 மாடல்களை உள்ளடக்கிய ரெனோ 15 சீரீஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒப்போ தெரிவித்துள்ளது. கூடவே இந்த 3 ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு, கட்டமைப்பு, ட்யூரபிலிட்டி மற்றும் டிஸ்பிளே குறித்த விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 15 ப்ரோ: இது ஹோலோஃபியூஷன் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட ஒன்-பீஸ் கிளாஸ் பேக்கை பெற்று - ரெனோ 15 சீரீஸின் பிரீமியம் மாடல் ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது சன்செட் கோல்ட் மற்றும் கோகோ பிரவுன் ஆகிய 2 கலர்களில் அறிமுகமாகும் மற்றும் டைனமிக் ஸ்டெல்லர் ரிங் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

வந்துட்டான் OPPO.. Mini போன் உட்பட 3 புதிய 5ஜி போன்கள்!

ஒப்போ ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 7.65 மிமீ ஸ்லிம் டிசைனை கொண்டிருக்கும் இருந்தபோதிலும், இது சுமார் 205 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் மேம்பட்ட டிராப் ரெசிஸ்டன்ஸிற்காக ஒப்போவின் ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி மற்றும் ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங்குடன் இணைக்கப்பட்ட ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினிய ஃபிரேமை பயன்படுத்துகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது மிக மெல்லிய 1.15மிமீ பெசல்கள், 95.5 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, FHD+ ரெசல்யூஷன், 10-பிட் கலர் டெப்த் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ரெனோ 15 ப்ரோ மினி: இது காம்பாக்ட் ஆன பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை தேடும் பயனர்களுக்கான மாடல் ஆக இருக்கும். இது கோகோ பிரவுன் மற்றும் கிளேசியர் ஒயிட் ஆகிய கலர்களில் வருகிறது. இது ஹோலோஃபியூஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 3டி ரிப்பன் அமைப்பை கொண்டுள்ளது. இது 7.99மிமீ தடிமன் மற்றும் எடையில் சுமார் 187 கிராம் உள்ளது

மேலும் ப்ரோ மாடலை போலவே வலுவூட்டப்பட்ட உள் அமைப்பு மற்றும் அலுமினிய பிரேமை தக்க வைத்து கொண்டுள்ளது. இது 10-பிட் கலர், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.32-இன்ச் AMOLED டிஸ்ப்ளே FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ மற்றும் AGC DT-STAR D+ ஆகிய கலவையால் பாதுகாப்பையும் பெறுகிறது. இது 1.6 மிமீ அளவுக்கு குறுகிய அல்ட்ரா-ஸ்லிம் பெசல்கள் மற்றும் 93.35 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோவை கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 15: ஸ்டாண்டர்ட் ஒப்போ ரெனோ 15 மாடல் ஆனது இயற்கையால் ஈர்க்கப்பட்ட அழகியலில் கவனம் செலுத்துகிறது. இது க்ளேசியர் ஒயிட், ட்விலைட் ப்ளூ மற்றும் அரோரா ப்ளூ ஆகிய கலர்களில் வரும். இந்த ஸ்மார்ட்போனின் எடை தோராயமாக 197 கிராம் இருக்கும் மற்றும் இது ரெனோ 15 சீரீஸ் முழுவதும் பயன்படுத்தப்படும் அதே வலுவூட்டப்பட்ட சேஸ், குஷனிங் சிஸ்டம் மற்றும் அலுமினிய பிரேமை பெறும்

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது FHD+ ரெசல்யூஷன், 10-பிட் கலர் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது பிரகாசமான வெளிப்புற நிலைகளில் 1200 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸை ஆதரிக்கிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ஆல் பாதுகாக்கப்படுகிறது.

பொதுவான அம்சங்கள்: மேற்கண்ட மூன்று மாடல்களும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளை கொண்டுள்ளன, மேலும் அரிப்பை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிளாட்டினம்-பூசப்பட்ட யுஎஸ்பிஐ போர்ட் உள்ளது. ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி மற்றும் ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங் ஆகியவைகளை கொண்டுள்ளன.

எப்போது அறிமுகம்? ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஜனவரி 2026 இல் இந்தியா உட்பட பல ஆசிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், இது அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோர், பிற முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15 Mini Reno 15 Pro Reno 15 Key Details Revealed Ahead India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X