அது வேற.. இது வேற.. OPPO ரெனோ 15-க்கு இதுதான்.. குளோபலுக்கு ஒன்னு.. சீனாவுக்கு ஒன்னு.. அப்போ இந்தியாவில் என்ன?
ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 15 (Reno 15) ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் ஒரு சிப்செட்டும் குளோபல் மார்கெட்டில் வேறு சிப்செட்டும் கொடுக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, டைமன்சிட்டி சிப்செட் பெயர் அடிப்பட்டது. இப்போது, ஸ்னாப்டிராகன் சிப்செட் கிடைக்க இருப்பது போல் தெரிகிறது. அப்போது, இந்திய மார்கெட்டில் என்ன சிப்செட் கிடைக்கும்? இதுகுறித்த விவரங்கள் இதோ.
ஓப்போ ரெனோ 15 (OPPO Reno 15) மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ (OPPO Reno 15 Pro) ஆகிய மாடல்கள் வருகிற நவம்பர் 17ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. வெளியீடு நெருங்கிவிட்டதால், அந்த மாடல்களின் பீச்சர்கள் ஏற்கனவே கசிந்துவிட்டன. ஆனால், குளோபல் வெர்ஷனில் பல்வேறு மாற்றங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

சிப்செட் மட்டுமல்லாமல், கேமரா, பேட்டரி போன்ற பீச்சர்களிலும் பல்வேறு மாற்றங்கள் வர இருக்கிறது. இந்திய மார்கெட்டில் எப்போதும், குளோபல் மார்கெட்டில் வெளியாகும் வெர்ஷன்களே கிடைக்கும். ஆகவே, இனிமேல் சீன வெர்ஷனைவிட குளோபல் வெர்ஷனுக்கே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கப் போகிறது. இந்த பீச்சர்கள் ஸ்மார்ட்பிரிக்ஸ் மூலம் தெரிய வந்துள்ளன.
ஓப்போ ரெனோ 15 அம்சங்கள் (OPPO Reno 15 Specifications): இந்த குளோபல் வெர்ஷனில் 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 6500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கிடைக்க இருக்கிறது. 3.5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த குளோபல் வெர்ஷன் 2026ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் அதற்கு பிறகு எதிர்பார்க்கலாம். சீன வெர்ஷன் வருகிற நவம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த வெர்ஷனில் பீச்சர்களில் பல அப்கிரேட்கள் மற்றும் சில மாற்றங்களும் இருக்கின்றன. ஆகவே, இந்த பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனின் சீன வெர்ஷனில் 6.32 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இது குளோபல் வெர்ஷனைவிட சிறியதாகும். இதிலும் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த வெர்ஷனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 (MediaTeK Dimensity 8450) சிப்செட் கிடைக்கிறது. டிஸ்பிளேவை போலவே பேட்டரி கேபாசிட்டி குறைவாகும்.
இதில் 6200mAh பேட்டரி மட்டுமே வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆனால், குளோபல் வெர்ஷனில் 50 எம்பி மெயின் கேமரா மட்டுமே கிடைத்தது. இதில் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. அதேபோல 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. கேமராவில் அப்கிரேட் இருக்கிறது.
ஆகவே, சீன வெர்ஷனை விட குளோபல் வெர்ஷன் பட்ஜெட்டில் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான கிடைக்கலாம். ஓப்போ ரெனோ 14 சீரிஸ் மாடல்கள் கேமராவில் பட்டையை கிளப்பின. ஆனால், ரெனோ 15 சிரீஸின் குளோபல் வெர்ஷன் மெகாபிக்சலில் குறைவாக இருக்கிறது. இருப்பினும், ஓப்போ உறுதி செய்யும்வரை காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








