Home
Mobile

ரெடியா இருங்க.. 200எம்பி கேமரா.. 6200mAh பேட்டரி.. வருகிறது புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ ரெனோ 15 (Oppo Reno 15) ஸ்மார்ட்போன் ஆனது வரும் நவம்பர் 17-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்போ ரெனோ 15 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 15 அம்சங்கள் (Oppo Reno 15 Specifications): 6.32-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2640 x 1216 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்கும்.

ரெடியா இருங்க.. 200எம்பி கேமரா.. வருகிறது புது Oppo 5ஜி போன்..

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (Dimensity 8400) சிப்செட் உடன் புதிய ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் வெளியாகும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என ஐந்து வேரியண்ட்களில் இந்த ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் வெளியாகும். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ ரெனோ 15 மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் எடை 187 கிராம் ஆகும்.

50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்பி பிரைமரி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளன.

6200mAh பேட்டரி உடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அரோரா ப்ளூ ( Aurora Blue), ஸ்டார்லைட் போ (Starlight Bow), கேனெல் பிரவுன் (Canele Brown) மற்றும் ஸ்டார் பிங்க் (Star Pink) நிறங்களில் இந்த ஒப்போ ரெனோ 15 போன் வெளிவரும். மேலும் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15 full specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X