Home
Mobile

நிறுத்த மாட்றான் யா.. 2026 ஆரம்பிச்சு 15 நாள் ஆகல.. 5வது புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.. OPPO சரவெடி!

ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ரெனோ 15 சீரிஸின் கீழ் ஏற்கனவே 4 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், ரெனோ 15 சீரீஸின் கீழ் 5வது மாடல் ஆக, ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி (Oppo Reno 15 FS 5G0 ஸ்மார்ட்போனை இத்தாலியில் அறிமுகப்படுத்தி உள்ளது

முதலில் ஒப்போ ரெனோ 15 சீரிஸின் கீழ், ரெனோ 15 5ஜி, ரெனோ 15 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி ஆகிய 3 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. மறுவாரமே 4வது மாடல் ஆக ஒப்போ ரெனோ 15சி 5ஜி (Reno 15C 5G) இந்தியாவில் அறிமுகமானது.

2026 ஆரம்பிச்சு 15 நாள் ஆகல.. 5வது புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இந்தியாவில் ஒப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.48,999 மற்றும் ரூ.53,999 என்று நிர்ணய செய்யப்பட்டுள்ளது

ஒப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகள் முறையே ரூ.67,999 மற்றும் ரூ.59,999 இல் தொடங்குகிறது. இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே வருகிற ஜனவரி 13 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன

பின்னர் 4வதாக அறிமுகமான ஒப்போ ரெனோ 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் தான் இத்தாலியில் ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி. சுமார் ரூ.41,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8GB + 256GB ஆப்ஷனின் விலை நிர்ணயம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, மற்ற சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.57-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 5ஜி சிப்
- ஓஐஎஸ் 50-மெகாபிக்சல் ஸ்மார்ட்சென்ஸ் SC532HS ப்ரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
- 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சார் (செல்பீ கேமரா)
- 6500mAh பேட்டரி
- 80W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ரெனோ 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.57-இன்ச் FHD+ (2372 × 1080 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- குவால்காம் 4 என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்
- 12ஜிபி வரை LPDDR4x ரேம்
- 256ஜிபி வரை UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜி

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கலர்ஓஎஸ் 16
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
- எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 30 பிரேம்களில் 4K ரெசல்யூஷன் வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா
- 30 பிரேம்களில் 4K வீடியோ ரெக்கார்டிங்

- 7,000mAh பேட்டரி
- 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்
- 5ஜி SA மற்றும் NSA
- டூயல் 4G VoLTE
- வைஃபை 802.11 ஏசி
- ப்ளூடூத் 5.4
- IP66, IP68, மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- அளவீட்டில் 158.18×74.93×8.14மிமீ மற்றும் எடையில் 195 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15 FS 5G With 6500mAh Battery Snapdragon 6 Gen 1 5G Chip Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X