Home
Mobile

செஞ்சிட்டான் OPPO.. சைலன்ட் ஆக புது 5G போன்.. 6500mAh பேட்டரி, 80W சார்ஜிங், 8GB ரேம், 2TB மெமரி, IP68!

ஒப்போ (Oppo) நிறுவனம் ஆனது - இந்தியாவில் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள - அதன் ஒப்போ ரெனோ 15 சீரீஸின் (Oppo Reno 15 Series) கீழ் பல வகையான "புது" ஆச்சரியங்களை ஒளித்து வைத்துள்ளது போல் தெரிகிறது.

ஒப்போ ரெனோ 15 சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி (Oppo Reno 15 Pro Mini) என்கிற மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் ஒப்போ ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் சுவாரசியத்தை கிளப்பியுள்ளது.

செஞ்சிட்டான் OPPO.. சைலன்ட் ஆக புது 5G போன்.. 6500mAh பேட்டரி!

இந்நிலைப்பாட்டில் அதே சீரிஸின் கீழ் ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி (Oppo Reno 15 FS 5G) என்கிற மாடலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. கூடவே இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் அறிமுகம் செய்யப்படாத ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஐரோப்பிய இ-காமர்ஸ் வலைத்தளமான எப்டோ.இன் (Epto.it) இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை 459.90 யூரோ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.48,000 ஆகும். இது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.

ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16
- 93 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 397ppi பிக்சல் டென்சிட்டி
- 6.57-இன்ச் (1080 x 2372 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே

- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 2டிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்க ஆதரவு
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.9 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா

- 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 2 மெகாபிக்சல் மூன்றாவது சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், வைஃபை 5, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி

ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.32 இன்ச் AMOLED டிஸ்பிளே
- சுமார் 1.6 மிமீ அளவிலான மெல்லிய பெஸ்ல்ஸ்
- சுமார் 187 கிராம் எடை
- தோராயமாக 7.99 மிமீ தடிமன்
- கிளாஸ் பேக் பேனல்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP67 மற்றும் IP69 ரேட்டிங்

எப்போது அறிமுகம்? சரியான லான்ச் டைம்லைன் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால் இது இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளுக்கு மட்டுமே வரம்பிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 15 சீரீஸின் இந்திய அறிமுகம் டிசம்பரில் நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மினி ஸ்மார்ட்போனும் இடம்பெறலாம்.

புதிய ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனானது ஒப்போ ரெனோ 15 சீரீஸின் ஒருபகுதியாக இருக்கும், நினைவூட்டும் வண்ணம் இந்த சீரிஸின் கீழ் ஏற்கனவே 3 மாடல்கள் (சீனாவில்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன: ஒப்போ ரெனோ 15, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 15சி. இப்போது இந்த சீரீஸில் ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் இணைந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15 FS 5G Price Full Specifications leaked Suggest India Launch Could Happen Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X