Home
Mobile

OPPO அறிமுகம் செய்த 5ஜி போன்கள்.. 200எம்பி கேமரா.. ஒஎல்இடி டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன மாடல்?

ஒப்போ ரெனோ 15 (OPPO Reno 15) மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ (OPPO Reno 15 Pro) ஸ்மார்ட்போன்களை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். இந்த புதிய ஒப்போ போன் கூடிய விலையில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 15 அம்சங்கள் (OPPO Reno 15 Specifications): 6.32-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. கலர்ஓஎஸ் 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த போன் இயங்குகிறது.

OPPO அறிமுகம் செய்த 5ஜி போன்கள்.. 200எம்பி கேமரா..எந்த மாடல்?

ஆக்டா கோர் டைனம்சிட்டி 8450 4என்எம் சிப்செட் மற்றும் மாலி ஜி720 எம்சி7 ஜிபியு (Mali-G720 MC7 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இந்த போனில் உள்ளது. மேலும் 50எம்பி செல்பி கேமரா, 6200mAh பேட்டரி, 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. இந்த போனின் எடை 187 கிராம் ஆகும். ஸ்டார்லைட், அரோரா ப்ளூ மற்றும் கனெலே பிரவுன் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 15 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno15 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. கலர்ஓஎஸ் 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த போன் இயங்குகிறது.

ஆக்டா கோர் டைனம்சிட்டி 8450 4என்எம் சிப்செட் மற்றும் மாலி ஜி720 எம்சி7 ஜிபியு (Mali-G720 MC7 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் , யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இந்த போனில் உள்ளது. மேலும் 50எம்பி செல்பி கேமரா, 6500mAh பேட்டரி, 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. இந்த போனின் எடை 205 கிராம் ஆகும். ஸ்டார்லைட், ஹனி கோல்ட் மற்றும் கனெலே பிரவுன் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

OPPO அறிமுகம் செய்த 5ஜி போன்கள்.. 200எம்பி கேமரா..எந்த மாடல்?

ஒப்போ ரெனோ 15 விலை:
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.37,430)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.41,180)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 விலை 3599 yuan (இந்திய மதிப்பில் ரூ.44,925)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.49,920)

ஒப்போ ரெனோ 15 ப்ரோ விலை:
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 ப்ரோ விலை 3699 yuan (இந்திய மதிப்பில் ரூ.46,170)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 ப்ரோ விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.49,920)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 ப்ரோ விலை 4299 yuan (இந்திய மதிப்பில் ரூ.53,660)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15 ப்ரோ விலை 4799 yuan (இந்திய மதிப்பில் ரூ.59,900)

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 15 and Reno 15 Pro launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X