இந்த ஒத்த போன் வந்தா.. அப்புறம் இருக்கு.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. IP69 ரேட்டிங்.. 16GB ரேம்.. மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடல்களான ஓப்போ ரெனோ 15 5ஜி (OPPO Reno 15 5G) மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி (OPPO Reno 15 Pro 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களின் பீச்சர்கள் கசிந்து, ஒட்டுமொத்த மார்கெட்டை மிரளவிட்டுள்ளன. 200 எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, IP69 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. இந்த ஓப்போ ரெனோ 15 5ஜி சீரிஸ் மாடல்களின் பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ 14 5ஜி (OPPO Reno 14 5G) மற்றும் ஓப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி (OPPO Reno 14 Pro 5G) ஆகிய மாடல்கள் கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருந்தன. ஏனென்றால், ரெனோ 14 மாடலில் 6000mAh பேட்டரி + 80W சார்ஜிங் மற்றும் ரெனோ 14 ப்ரோவில் 6200mAh பேட்டரி + 80W சார்ஜிங் கிடைத்தது.

இதனால், அடுத்து வெளியாக இருக்கும் ரெனோ 15 5ஜி சீரிஸ் மாடல்களில் கிட்டத்தட்ட 7000mAh கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் 200 எம்பி கேமரா கிடைக்க இருப்பது கசிந்த பீச்சர்கள் மூலம் தெரியவந்து, அந்த மாடல்கள் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் இந்த பீச்சர்கள் தெரிய வந்துள்ளன.
ஓப்போ ரெனோ 15 5ஜி அம்சங்கள் (OPPO Reno 15 5G Specifications): இந்த ரெனோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 8450 SoC) கிடைக்க இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் வர இருக்கிறது. 6.32 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் வர இருக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பிளாட் டிசைனில் கிடைக்க இருக்கிறது. முந்தைய மாடலை தூக்கி சாப்பிடும்படி டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. ஆகவே, 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. இதில் ஓஐஎஸ் டெக்னாலஜி வர இருக்கிறது.
50 எம்பி செல்பீ ஷூட்டர் வர இருக்கிறது. ரெனோ 14 ஸ்மார்ட்போனை போலவே அண்டர்வாட்டர் போட்டோகிராபி எதிர்பார்க்க முடிகிறது. ஏனென்றால், இதிலும் மெட்டல் ஃபிரேம் மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. இப்போது ரெனோ 15 ப்ரோ மாடலின் பீச்சர்களை பார்க்கலாம்.
ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno 15 Pro 5G Specifications): இந்த ப்ரோ மாடலில் 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. பெரிய சிலிகான் கார்பன் பேட்டரி வர இருக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட 7000mAh எதிர்பார்க்கலாம். இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ஃபாஸ்ட் சார்ஜிங் 80W-க்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த மாடலிலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. வருகிற நவம்பர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம். கேமரா மற்றும் பேட்டரிக்கு பக்காவான மாடல்களாக இவை இருக்கும்.


Click it and Unblock the Notifications








