அடுத்த Oppo போன் ரெடி.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி (Oppo Reno14FS 5G) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய ஒப்போ போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி போனின் படங்கள் மற்று முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி அம்சங்கள் (Oppo Reno14FS 5G Specifications): 6.57-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 6 Gen 4 SoC)சிப்செட் உடன் இந்த ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலர்ஓஎஸ் 15.0.2(ColorOS 15.0.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் "சர்க்கிள் டு சர்ச்" (Circle to Search), ஜெமினி ஏஐ (Gemini AI) உள்ளிடட பல மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளன.
6000mAh பேட்டரி உடன் ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் இந்த ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஒப்போ போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ ரெனோ 14எஸ் 5ஜி போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Photo Credit: Ytechb


Click it and Unblock the Notifications








