இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. புது Oppo போன் அறிமுகம்.. எந்த மாடல்?
தைவானில் ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி (Oppo Reno 14 Pro) ஸ்மார்ட்போன் உடன் ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி (Oppo Reno 14F 5G) ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி அம்சங்கள் (Oppo Reno 14F 5G specifications): 6.83-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) வசதியுடன் ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15 (ColorOS 15)இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். அதற்கு தகுந்த பல அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளது.
குறிப்பாக டூயல் ஸ்பீக்கர்கள் (dual speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஓப்போ போன். பின்பு IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த போனில் உள்ளது.
6000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது
டூயல் சிம் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 180 கிராம் ஆகும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஓப்போ ரெனோ 14 எப் 5ஜி போனின் விலை NTD 12,990 (இந்திய மதிப்பில் ரூ.37,996) ஆகும். பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை NTD 13,990 (இந்திய மதிப்பில் ரூ.40.929) ஆகும். பிங்க், ப்ளூ, கிரீன் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications