நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Oppo 5ஜி போன்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி (Oppo Reno 14 Pro 5G) ஸ்மார்ட்போன் உடன் ஒப்போ ரெனோ 14 5ஜி (Oppo Reno 14 5G) மாடலும் அறிமுகமாகும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஒப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ ரெனோ 14 ப்ரோ அம்சங்கள் (Oppo Reno 14 Pro specifications): 50எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும்.

அதேபோல் 6.83-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8450 எஸ்ஒசி (MediaTek Dimensity 8450 SoC) சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது
அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன.
ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் 6200mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.41,500 பட்ஜெட்டில் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








