Home
Mobile

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 6200mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. புது Oppo போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனம் தனது புதிய ஓப்போ ரெனோ 14 ப்ரோ (Oppo Reno 14 Pro) ஸ்மார்ட்போனை தற்போது தைவானில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஓப்போ ரெனோ 14 ப்ரோ (Oppo Reno 14 Pro specifications): 6.83-இன்ச ஃபுல் எச்டி பிளாட் ஒஎல்இடி எல்டிபிஎஸ் டிஸ்பிளே (OLED LTPS display) உடன் ஓப்போ ரெனோ 14 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz PWM dimming), 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. புது Oppo போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஓப்போ ரெனோ 14 ப்ரோ போன் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 50எம்பி செல்பி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட்(MediaTek Dimensity 8450 chipset) வசதியுடன் ஓப்போ ரெனோ 14 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15 (ColorOS 15) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

குறிப்பாக டூயல் ஸ்பீக்கர்கள் (dual speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஓப்போ போன். பின்பு IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த போனில் உள்ளது.

6200mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஓப்போ ரெனோ 14 ப்ரோ போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. புது Oppo போன் அறிமுகம்.. எந்த மாடல்?

வைஃபை 6, புளூடூத் 5.4, ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஓப்போ ரெனோ 14 ப்ரோ போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 202 கிராம் ஆகும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

ஓப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை NTD 23,990 (இந்திய மதிப்பில் ரூ.69,950) ஆகும். பிளாக் மிஸ்ட் கிரே மற்றும் கார்ஜியஸ் ஒயிட் நிறங்களில் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 14 Pro launched in Taiwan: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X