முரட்டு போனை களமிறக்கும் ஒப்போ.. OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 15.. எந்த மாடல்?
ஒப்போ (Oppo) நிறுவனம் அடுத்து ஒப்போ ரெனோ 14 ப்ரோ (Oppo Reno 14 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு வெளியாகும் இந்த ஒப்போ போன்.
மேலும் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதி இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது. மேலும் மற்ற ஒப்போ போன்களை விட தனித்துவமான டிசைன் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 14 ப்ரோ அம்சங்கள் (Oppo Reno 14 Pro Specifications): ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (optical image stabilisation) ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (periscope telephoto) + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா (ultrawide camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவரும்.
எனவே இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.
ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவரும்.
ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக கலர்ஒஎஸ் 15 (ColorOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ஒப்போ ரெனோ 14 ப்ரோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஒப்போ ரெனோ 14 ப்ரோ போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Photo Credit: Smartprix, latestly


Click it and Unblock the Notifications