Home
Mobile

இதை நாம எதிர்பார்க்கவே இல்லையே.. 6000mAh பேட்டரி.. அறிமுகமானது புதிய Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி (Oppo Reno 14 FS 5G) ஸ்மார்ட்போனை தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். இப்போது இந்த புதிய ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி அம்சங்கள் (Oppo Reno 14 FS 5G specifications): 6.57-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2372 x 1080 பிக்சல்ஸ், 1400 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இதை நாம எதிர்பார்க்கவே இல்லையே..அறிமுகமானது புதிய Oppo 5ஜி போன்..

50எம்பி பிரைமரி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கலர் ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

6000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸமார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அகவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, இசிம் சப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உடன் ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனின் எடை 180 கிராம் ஆகும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனின் விலை குறித்த தகவலை வெளியிடவில்லை ஒப்போ நிறுவனம். விரைவில் இந்த புதிய ஒப்போ ரெனோ 14எப்எஸ் 5ஜி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும், அப்போது அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 14 FS 5G smartphone launched in Europe: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X