ஆத்தாடி ஆத்தா.. 6200mAh பேட்டரி, 16GB ரேம், 50MP SONY கேமரா, IP69 ரேட்டிங்.. OPPO-வின் 2 புதிய 5G போன்கள்!
ஒப்போ (OPPO) நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆன ஒப்போ ரெனோ 14 சீரீஸ் 5ஜி (OPPO Reno 14 Series 5G) மாடல்களின் உலகளாவிய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்பட உள்ளது. எப்போது? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
மலேசியாவில், ஒப்போ நிறுவனமானது தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்ட் மூலம் "விரைவில் வரும்" என்று கூறி ரெனோ 14 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை அறிவித்துள்ளது. ஆக மலேசியாவில் அறிமுகமாகும் அதே நாளில் அல்லது அதற்கு அடுத்து வரும் நாட்களில் இந்திய அறிமுகமும் நடக்கலாம். சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் க்ளோபல் வேரியண்ட்ஸ் ஆனது வெள்ளை, நீலம் மற்றும் பச்சை ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்லிம் ஆன டிசைன், க்ரெடியன்ட் ஆரா டிசைன் (Gradient Aura Design) மற்றும் இரிடெசன்ட் மெர்மைட் டிசைன் (Iridescent Mermaid Design) ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்களில் ஏஐ பிளாஷ் போட்டோகிராஃபி (AI Flash Photography), ஏஐ எடிட்டர் 2.0 (AI Editor 2.0) மற்றும் கலர்ஓஎஸ் (ColorOS) ஆகியவைகளும் இடம்பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் கலர்ஓஎஸ் ஆனது கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ (Android 15 OS) அடிப்படையாக கொண்ட வெர்ஷன் 15 ஆக இருக்கலாம்.

சீனாவில் அறிமுகமான ஒப்போ ரெனோ 14 சீரீஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: ரெனோ 14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.59-இன்ச் பிளாட் எல்டிபிஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் கூடிய மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதன்கீழ் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடன் கூடிய 50எம்பி சோனி ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3.5x ஜூம் கொண்ட 50எம்பி ஜேஎன்5 பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களில் லைவ் ஃபோட்டோ, 4கே எச்டிஆர் டூ லைவ் கன்வெர்ஷன் மற்றும் சிசிடி எபெக்ட் போன்ற புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பேட்டரியை பொறுத்தவரை இது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. குளிரூட்டலுக்காக இது நானோ ஐஸ் கிரிஸ்டல் ஹீட் சிங்க்கை பயன்படுத்துகிறது, இது நிலையான கிராஃபைட் ஷீட்களை விட மூன்று மடங்கு சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி66 / ஐபி68 / ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெல்வெட்-டெக்ஸ்ச்சர்டு கிளாஸ் பேக் உடன் கூடியமெட்டல் ஃபிரேம்-ஐ பயன்படுத்துகிறது. இது எடையில் 187 கிராமும் அளவீட்டில் 7.32 மிமீ தடிமனும் உள்ளது
மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 6.83-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது டைமன்சிட்டி 8450 சிப்பால் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. இது 6200mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








