OPPO Reno13 Pro 5G: ஆற்றல், செயல்திறன், புதுமை மற்றும் உற்பத்தித்திறனில் ஆதிக்கம் செலுத்துகிறது!

OPPO நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன Reno13 Pro 5G சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது. OPPO Reno13 Pro 5G ஆனது அதன் முன்னோடியை விட ஒரு பெரிய மேம்படுத்தலை வழங்குவது மட்டுமல்லாமல், உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட எண்ணற்ற மென்பொருள் அம்சங்களுடன், அதிக போட்டித்தன்மை கொண்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
OPPO Reno13 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு சக்திவாய்ந்த MediaTek Dimensity 8350 SoC சிப்செட் மூலம் இயங்குகிறது. இது ColorOS 15-ன் தடையற்ற மென்பொருள் அனுபவம் மற்றும் AI அம்சங்களின் செல்வமாக திகழ்கிறது. சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருளை தவிர, Reno13 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது ஒரு டாங்கியை போல கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இந்த பிரிவில் மிகவும் நீடித்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இப்போது, Reno13 Pro 5G ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களையும் விரிவாக பார்க்கலாம், இது எப்படி கொடுக்கும் விலைக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போனாக அமைகிறது என்பதை புரிந்துகொள்வோம்.

சிப்செட்டின் பின்னால் உள்ள புள்ளிவிவரங்கள்!
4NM MediaTek Dimensity 8350 SoC ஆனது 4 x Cortex-A715 செயல்திறன் கோர்கள் மற்றும்4 x Cortex-A510 செயல்திறன் கோர்கள் கொண்ட ஆக்டா-கோர் சிபியு-வை கொண்டுள்ளது, அதே நேரத்தில் அதிகபட்சமாக 3.35GHz கிளாக் ஸ்பீடை வழங்குகிறது. இங்குள்ள 8-கோர் சிபியு ஆனது 6-ஓர் Mali-G615 GPU உடன் அதிக கம்ப்யூட்டிங் சக்தி மற்றும் மேம்பட்ட செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏஐ திறன்கள் NPU 780 ஆல் இயக்கப்படுகிறது, ஏஐ பெஞ்ச்மார்க் வி5 ஆல் அளவிடப்பட்டபடி, இது 3.3எக்ஸ் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை வழங்கும் ஜெனரேட்டிவ் AI இன்ஜினை கொண்டுள்ளது.
Reno13 Pro 5G ஸ்மார்ட்போனின் சிப்செட் ஆனது, OPPO மற்றும் மீடியாடெக்கால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த மின் நுகர்வை பராமரிக்கும் அதே வேளையில் முதன்மை தர செயல்திறனை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தெளிவுத்திறன் அல்லது பிரேம் விகிதங்களில் சமரசம் செய்யாமல் மென்மையான மற்றும் நிலையான கேமிங் செயல்திறனை உறுதி செய்கிறது. எல்லாவற்றை விட முக்கியமாக இது, டிமாண்டிங் ஆன டைட்டில்களை இயக்கும் போதும் மின் நுகர்வை 15% வரை குறைக்கிறது. 4கே தெளிவுத்திறனில் வீடியோக்களை பதிவு செய்யும் போது Reno13 Pro 5G ஆனது 10% வரையிலாக குறைவான ஆற்றலை சேமிக்கும் என்பதால், இந்த செயல்திறன் ஆதாயங்கள் கேமிங்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை!

எந்த சமரசமும் இல்லாத தடையற்ற கேமிங்!
இந்த ஸ்மார்ட்போனின் பல்துறை கேமரா அமைப்பு, துடிப்பான டிஸ்பிளே, பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு மற்றும் தடையற்ற மென்பொருள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு Reno13 Pro 5G உடன் நினைவுக்கு வரும் முதல் வார்த்தை - நிச்சயம் கேமிங் பவர்ஹவுஸ் என்பதாக இருக்காது. இருப்பினும், Reno13 Pro 5G ஸ்மார்ட்போனில் உள்ள சிப், தொழில்துறையின் மிகவும் வெப்ப கடத்துத்திறன் கொண்ட கிராஃபைட் செயல்முறையை பயன்படுத்தும் பல்துறை குளிரூட்டும் அமைப்பால் நிரப்பப்படுகிறது, இது வழக்கமான கிராஃபைட்டுடன் ஒப்பிடும்போது 70% வெப்பச்சிதறலை மேம்படுத்துகிறது.
ஆனால் Reno13 Pro 5G ஸ்மார்ட்போனின் சிப்செட் ஆனது, கூலிங் சிஸ்டம் மற்றும் 12ஜிபி எல்பிபிடிஆர்5எக்ஸ் ரேம் ஆகியவைகளுடன் இணைந்து, பெஸ்ட் செட்டிங்ஸ்-ல் ஹை டிமாண்டிங் கேம்களை இயக்க உங்களுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்குகிறது. இதிலுள்ள மேம்படுத்தப்பட்ட AI HyperBoost தொழில்நுட்பமானது, நீட்டிக்கப்பட்ட கேமிங் சேஷன்களின் போதும் தடையற்ற கேம்பிளேவை வழங்குகிறது. இதன் மேம்பட்ட AI Adaptive Frame Stabilization அல்காரிதம் ஆனது, தொடர்ந்து அதிக பிரேம் வீதங்களை உறுதிசெய்கிறது, அதிக வேலைப்பளுவின் போதும் லேட்டன்சியை நீக்குகிறது.
OPPO Reno13 Pro 5G மூலம் 8 மணி நேரம் வரையிலும் ஸ்டெடியான சூப்பர் 60 FPS -இல் தடையற்ற Mobile Legends: Bang Bang (MLBB) ஆக்சனை நீங்கள் அனுபவிக்க முடியும், அதே நேரத்தில், பர்ஃபாமென்ஸ் ஸ்மூத் மற்றும் தொடுவதற்கு கூலான டிவைஸ் வைக்கப்பட்டிருக்கும். கூடுதலாக, அதன் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் மற்றும் ஓ-ஹாப்டிக்ஸ் டெக்னாலஜி ஆனது துல்லியமான, ரியல்-டைம் டச் ஃபீட்பேக்கை கொடுக்கின்றன. ஒவ்வொரு ஷாட் மற்றும் தாக்கத்தை நீங்கள் உணர இது அனுமதிக்கிறது.
OPPO Reno13 Pro 5G ஆனது OPPO-இன் கஸ்டம் SignalBoost Chip X1 உடன் கனெக்டிவிட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, தடையற்ற மல்டிபிளேயர் கேமிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. இது சிக்னல் வலிமையை மேம்படுத்துகிறது, சுவர் வழியாக கவரேஜை மேம்படுத்துகிறது மற்றும் டெட்-சோன்களை நீக்குகிறது. மீடியாடெக் சிப் ஆனது கேமிங்குக்கான முக்கிய டிரைவராக இருப்பதால், இது Dual Chip பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமிங் அட்வான்டேஜ்களை வலியுறுத்துகிறது, அதே நேரத்தில் எக்ஸ்1 சிப் நெட்வொர்க் ஸ்டெபிலிட்டியை மேம்படுத்துகிறது, ஆன்லைன் கேமிங்குக்கான ஸ்மூத் அனுபவத்தை உறுதி செய்து இதை "ஒரு உண்மையான லாக் கில்லர்" ஆக்குகிறது. இதன் சூப்பர் லோவ்-ஃபிரிகொன்சி ஆண்டெனா என்ஹான்ஸ்மெண்ட் ஆனது, பேஸ்மெண்ட்கள் அல்லது ரிமோட் லோகேஷன்கள் போன்ற வீக்கான சிக்னல் ஏரியாக்களிலும் கூட ஸ்டேபிளான கனெக்டிவிட்டியை உறுதி செய்கிறது. AI LinkBoost 2.0 மற்றும் கேம்-எக்ஸ்க்ளூசிவ் ஆண்டெனா டிசைனானது, இன்டன்ஸ் கேமிங் செசன்களின் போது குறுக்கீடுகளை தடுக்கிறது, ஸ்மூத், லாக்-ப்ரீ கேம்பிளேவை கொடுக்கிறது. ஹை நெட்வொர்க் பர்ஃபாமென்ஸ்க்காக டியூவி ரெயின்லேண்ட் ஆல் சான்றளிக்கப்பட்ட Reno13 Pro 5G, மிக முக்கியமான நேரங்களில் உங்களை இணைப்பிலேயே வைக்கிறது. ஓவர்ஹீட்டிங் அல்லாத லாக்-ப்ரீ கேமிங்கிற்காக இந்த சிப்செட் டியூவி எஸ்யூடி-லிருந்து எஸ் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.
ஸ்மார்ட் ஏஐ புரொடெக்டிவிட்டி மீட்ஸ் எண்ட்லெஸ் கஸ்டமைசேஷன்
OPPO Reno13 Pro 5G ஆனது ஸ்மூத், பர்சனலைடு மற்றும் நீடித்து உழைக்கும் அனுபவத்தை வழங்குகிறது. ரீபைண்டு ColorOS 15 ஸ்கினுடன் Android 15-ஐ இயக்கும் இது, உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு ஸ்மார்ட் ஏஐ புரொடெக்டிவிட்டி பீச்சர்களுடன் முடிவற்ற தனிப்பயனாக்குதல் விருப்பங்களை ஒருங்கிணைக்கிறது. OPPO இதற்கு ஆதரவாக மூன்று வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்களை உறுதியளிக்கிறது, இது உங்களது போனை புதியதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
கூடுதலாக, கடுமையான 60-மாத ஃப்ளூயன்சி டெஸ்ட்டுடன், Reno13 Pro 5G ஆனது ஐந்து வருட தினசரி பயன்பாட்டிற்கு பிறகும் ஸ்மூத், நம்பகமான பர்ஃபாமென்ஸை உறுதி செய்கிறது, ஆகவே, எதுவாக இருந்தாலும் உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற நீங்கள் இதை நம்பலாம். ப்ளூயிட் பர்ஃபாமென்ஸை தவிர, ColorOS 15 ஆனது Tap-to-Share, Screen Translator போன்ற சாப்ட்வேர் பீச்சர்களுடன் வருகிறது, மேலும், எண்ணற்ற ஏஐ எலிமெண்ட்களையும் மறந்துவிடக் கூடாது.
டேப்-டூ-ஷேர்: இந்த பீச்சர் ஆனது, தேர்ட்-பார்டி பிளாட்பார்ம்களை பயன்படுத்தாமலேயே iPhone யூசர்களுடன் AI LivePhoto ஷேரிங்கை ஆதரிக்கும் ஒரே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக Reno13 Pro 5G-ஐ மாற்றுகிறது.
ஸ்கிரீன் டிரான்ஸ்லேட்டர்: அப்டேட்டட் ஸ்கிரீன் டிரான்ஸ்லேட்டர் ஆனது பன்மொழி நிபுணர்களுக்கு ஏற்றது, உங்கள் ஃபுல் ஸ்கீன் அல்லது குறிப்பிட்ட செக்சன்களில் டெக்ஸ்ட்டை சிரமமின்றி மொழிபெயர்த்து, பல மொழிகளில் ஸ்மூத் கம்யூனிகேஷன் மற்றும் புரிதலை உறுதி செய்கிறது.
ஏஐ புரொடெக்டிவிட்டி பீச்சர்கள்:
• AI Summary ஆனது லாங் மெசேஜ்கள் அல்லது ஈமெயில்களின் விரைவான சம்மரிகளை வழங்குகிறது.
• AI Reply மூலம் மேசேஜ்களுக்கு சூழல் சார்ந்த பதில்களை வரைவு செய்ய முடியும், அதே நேரத்தில் ஏஐ ரைட்டர் அந்த மேசேஜ்களை செம்மைப்படுத்தவும்அல்லது சமூக ஊடக தளங்கள் அல்லது டிராப்ட் மெயில்களில் ஈர்க்கக்கூடிய போஸ்ட்களை உருவாக்கவும் உதவுகிறது.
• AI Speak மூலமாக உங்களால் ஒரு வெப்பேஜை படிக்க முடியும், இதன் மூலம் நீங்கள் கையில் இருக்கும் பணியில் கவனம் செலுத்த முடியும், இது உங்களை வேலை செய்ய அனுமதிக்கிறது மற்றும் சமீபத்திய செய்திகளுடன் தகவலறிவதற்கு உங்களை அனுமதிக்கிறது.
• ColorOS 15 ஆனது நோட்ஸ் ஆப்பில் ஏஐ என்ஹான்ஸ்மெண்ட்களையும், புதிய ஏஐ-பவர்ட் டாக்குமெண்ட்கள் ஆப்பையும் கொண்டுவருகிறது. இரண்டு ஆப்களிலும் இப்போது சம்மரியை சுருக்கவும், மீண்டும் எழுதவும் அல்லது கன்டென்ட்டை விரிவாக்க ஏஐ அசிஸ்டன்ட் இருக்கிறது. டாக்குமெண்ட் ஆப் ஆனது டாக்குமெண்ட்கள், ஸ்ப்ரெட்சீட்ஸ் மற்றும் பிரசன்டேஷன் பிராசஸிங் செய்யும் திறன்கொண்டது.
OPPO Reno13 Pro 5G ஆனது கூகுளின் ஜெமினி ஒருங்கிணைப்பு மற்றும் சர்க்கிள்-டு-சர்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது

ஜெமினி பல செயல்பாடுகளைச் செய்கிறது, அதாவது இதில் நமது கேள்விகளுக்குப் பதிலளிப்பது மற்றும் உரை, குறியீடு அல்லது படங்களை வழங்குவதன் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றுவது. மேலும் இது கூகுள் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கிறது மற்றும் சேவைகள், தகவலறிந்த பதில்களை வழங்க கூகுளின் தேடுபொறியின் விரிவான தரவுத்தளத்தை மேம்படுத்துகிறது.
Circle-to-Search பயனர்கள், தங்கள் திரையில் உள்ள உள்ளடக்கத்தை வட்டமிட்டு, உடனடியாக Google தேடல்களைச் செய்ய முடியும். குறிப்பாக எந்தவொரு பயன்பாட்டிலும் இந்த அம்சம் தடையின்றி இயங்கும். குறிப்பாக திரையில் உள்ள உரை அல்லது படங்களைத் தேர்ந்தெடுத்து உடனடியாக கூகுள் தேடலைச் செய்யலாம்.
நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு
செயல்திறன் மற்றும் மென்பொருள் ஒருபுறம் இருக்க, Reno13 Pro 5G ஆனது சிறந்த பாதுகாப்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போனின் முன் மற்றும் பின்புறம் பாதுகாப்புக்கு Corning Gorilla Glass 7i பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இது கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. அதுபோல் இது கிரேடு அலுமினியம் பிரேம் கொண்டுள்ளது.
மேலும் இதில் உள்ள ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி விரிவான பாதுகாப்பை வழங்குகிறது. பின்பு Advanced Sponge Bionic குஷனிங்குடன் இணைந்த வலுவான வெளிப்புறத்தை வழங்குகிறது இந்த போன். அதேபோல் இந்த போனுக்கு IP66, IP68, IP69 சான்றளிக்கப்பட்டுள்ளது. அதாவது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது இந்த அட்டகாசமான ஒப்போ போன். குறிப்பாக 2 மீட்டர் வரை 30 நிமிடங்களுக்கு மூழ்குவது மற்றும் அதிக அழுத்தம், உயர் வெப்பநிலை நீர் ஆகியவற்றிற்கு எதிராக வலுவாக நிற்கிறது இந்த போன்.
OPPO Reno13 Pro 5G ஆனது சிறந்த தரம் மற்றும் 7.55mm தடிமன் கொண்ட ஒரு நேர்த்தியான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை வெறும் 195 கிராம் ஆகும். OPPO Reno13 Pro 5G இரண்டு அசத்தலான வண்ணங்களில் வருகிறது - அதாவது கிராஃபைட் கிரே மற்றும்
ஸ்டைலான மிஸ்ட் லாவெண்டர் நிறங்களில் வருகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் நீடித்த மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைப் பெருமைப்படுத்துகிறது. அதுவும் Reno13 Pro 5G வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

AI பவர் மூலம் அல்டிமேட் புகைப்படம் எடுத்தல் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு
Reno13 Pro 5G ஆனது 50MP Sony IMX890 பிரைமரி சென்சார் (எப்/1.88, ஒஐஎஸ், 1/1.56), 50MP சாம்சங் ஜேஎன்5 டெலிபோட்டோ லென்ஸ் (3.5எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம், ஒஐஎஸ்) மற்றும் 8MP ஒவி08டி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கு என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன், அதுவும் ஜேஎன்5 சென்சார் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமரா ஆனது மேம்பட்ட AI அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. எனவே அசத்தலான படங்களை இதன் மூலம் எடுக்க முடியும்.
OPPO Reno13 Pro 5G அதன் அதிநவீன ஏஐ அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் புகைப்படக் கலையை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளது. AI Livephoto ஆதரவுடன், உங்கள் அணைத்து தருணங்களையும் உடனுக்குடன் 2கே தெளிவுடன் ரெக்கார்ட் செய்கிறது. இதன் AI Clarity Enhancer 10X ஜூமில் கூட கூர்மையான, தொழில்முறை அளவிலான டீடைலிங் விவரங்களை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் AI Reflection Remover கவனச்சிதறல் இல்லாத புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரதிபலிப்புகளை நீக்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்தியேகமாக அண்டர்வாட்டர் மோட் உடன் இது அற்புதமான நீருக்கடியில் படம்பிடிக்க அனுமதிக்கிறது. விண்டேஜ், ஸ்கை-பை மற்றும் ஃபாண்டஸி போன்ற தீம்களுடன் வில் AI Studio, AI Magic பயன்படுத்தி அசாதாரண போர்ட்ரைட் படங்களை உருவாக்குகிறது. AI Night Portrait, AI Unblur மற்றும் AI Clear ஃபேஸ் ஆகியவை எந்த நிலையிலும் துடிப்பான, விரிவான மற்றும் நாய்ஸ் இல்லாத படங்களை படம்பிடிக்க அனுமதிக்கிறது. அதே நேரத்தில் AI Eraser 2.0 தேவையற்ற நபர்கள் அல்லது பொருட்களை புகைப்படத்தில் இருந்து நீக்க உதவுகிறது. AI Best Face டிஸ்ட்ரக்ஷன்களை நீக்கி மூடிய கண்களை சிரமமின்றி சரிசெய்வதன் மூலம் ஒவ்வொரு ஷாட்டையும் சிறப்பானதாக மாற்றுகிறது.
நீங்கள் பொழுதுபோக்கு அல்லது கேமிங்கை விரும்பினாலும், Reno13 Pro 5G இன் பெரிய 6.83" இன்ச் 1.5K OLED டிஸ்பிளேவை நீங்கள் ஒருபோதும் தவறவிட மாட்டீர்கள். ஒப்போ இதை 120Hz Smart Adaptive Screen என்று அழைக்கிறது. ஏனெனில் இது கையில் உள்ள பணியைப் பொறுத்து 60Hz, 90Hz மற்றும் 120Hz அளவுக்கு இடையில் மாறும் திறன் கொண்டது. இந்த டிஸ்பிளேசான்றளிக்கப்பட்ட குறைந்த நீல ஒளி பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் வசதியான மற்றும் உயர்தர பார்வை அனுபவத்திற்காக எச்டிஆர் உள்ளடக்கத்தை ஆதரிக்கிறது.
இறுதியாக, OPPO Reno13 Pro 5G ஆனது ஒரு பெரிய 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒன்றரை நாள் நீடித்து நிலைக்கும் ஆயுளை மிதமான பயன்பாட்டில் வழங்குகிறது. மேலும், இந்த பேட்டரி 80W SUPERVOOCTM ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவால் ஆதரிக்கப்படுகிறது. இது வெறும் 48 நிமிடங்களில் போனை முழுமையாக சார்ஜ் செய்கிறது. ஒப்போ போட்டியாளர்களை விட ஒரு வருடம் அதிகமாக, ஐந்து வருட திரவ பேட்டரி செயல்திறனை இந்த சாதனம் உத்தரவாதம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை
ஒப்போ அதன் 'ஏ கேமை' Reno13 Pro 5G உடன் 50கே விலைக்கும் குறைவான பிரிவுக்குள் கொண்டுவருகிறது. MediaTek Dimensity 8350 சிப், ஒப்போவால் சிறந்த சக்தி மற்றும் செயல்திறனின் சமநிலையை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் Reno13 Pro 5G 2025 ஆம் ஆண்டில் எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத சிறந்த நிலையான செயல்திறனை சந்தேகமின்றி வழங்கப்போகிறது என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை.
லேக்-ப்ரீ கேமிங் அனுபவம், புதுமையான தடையற்ற மென்பொருள் பவர், மேம்பட்ட ஏஐ உற்பத்தித்திறன் அம்சங்கள், இணையற்ற நீடித்துழைக்கும் உறுதி மற்றும் வெர்சடைல் ஆப்டிக்கல் பண்புகளுடன் Reno13 Pro 5G முடிவற்ற சாத்தியக்கூறுகளை உங்கள் உள்ளங்கைகளில் வழங்குகிறது. உண்மையிலேயே இது உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது. ஆல்-இன்-ஒன் பவர்ஹவுஸ் போனை தேடுபவர்களுக்கு, Oppo Reno13 Pro 5G ஒரு சிறந்த இறுதித் தேர்வாகும்.

இந்தியாவில் OPPO Reno13 Pro 5G விலை மற்றும் சலுகைகள்
OPPO Reno13 Pro 5G இந்தியாவில் இரண்டு அற்புதமான வகைகளில் கிடைக்கிறது: 12ஜிபி + 256ஜிபி விலை ரூ. 49,999 ஆகும். இதன் 12ஜிபி + 512ஜிபி மாடல் விலை ரூ. 54,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ வழங்கும் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பயன்படுத்திக் கொள்ள மறக்காதீர்கள், இதன் மூலம் 12ஜிபி + 256ஜிபி வேரியண்டின் விலையை ரூ. 44,999 ஆகவும், 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் மாடலின் விலையை ரூ. 49,499 ஆகவும் குறைத்து வாங்க முடியும்.
OPPO E-store, Flipkart மற்றும் பிரதான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வழியாக இப்போதே இந்த போனை வாங்கலாம் #LiveInTheMoment.


Click it and Unblock the Notifications








