Home
Mobile

எதை வாங்க? இரண்டுமே விலை கம்மியா இருக்கே.. Oppo Reno 14 அறிமுகமான வேகத்தில் Oppo Reno 13 மீது விலை குறைப்பு!

ஒப்போ ரெனோ 14 சீரிஸ் (Oppo Reno 14 Series) ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமான வேகத்தில், பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) ஆனது ஒப்போ ரெனோ 13 (Oppo Reno 13) ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.

ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போனின் அசல் விலையும் ஆபர் விலையும்: கடந்த 2025 ஜனவரி மாதத்தில் ஒப்போ ரெனோ 13 சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 13 5ஜி (Oppo Reno 13 5G) மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி (Oppo Reno 13 Pro 5G) ஆகிய 2 மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகின.

Oppo Reno 14 அறிமுகமான வேகத்தில் Oppo Reno 13 மீது விலை குறைப்பு!

ஒப்போ ரெனோ 13 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கும், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும் அறிமுகமானது. மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகமானது.

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில், ஒப்போ ரெனோ 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.31,700 முதல் என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால் ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதே ரூ.49,999 முதல் என்கிற விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ரெனோ 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை (Oppo Reno 14 Series Price in India) விவரங்கள்: ஒப்போ ரெனோ14 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.37,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும் மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.42,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள ரெனோ14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.49,999 ஆகும் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.54,999 ஆகும்.

ஒப்போ ரெனோ 14 சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே வருகிற ஜூலை 8 ஆம் தேதி முதல் அமேசான் (Amazon),பிளிப்கார்ட் (Flipkart), மெயின்லைன் ரீடெயில் அவுட்லெட்ஸ் (Mainline Retail Outlets) மற்றும் ஒப்போ இ-ஸ்டோர்( OPPO E-store) வழியாக சில சலுகைகளுடன் வாங்குவதற்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Oppo Reno 13 Specifications):
- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 460பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 1256 × 2760 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.59-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே

- 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்
- 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்

- 80W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5,600mAh பேட்டரி
- 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66+IP68+IP69 ரேட்டிங்
- மேம்பட்ட சிக்னல் கவரேஜை வழங்குவதாக கூறப்படும் ஒப்போவின் கஸ்டம் எக்ஸ்1 நெட்வொர்க் சிப்

ஒப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் (Oppo Reno 14 Series Specifications):
- ரெனோ 14 மாடலில் 6.59-இன்ச் டிஸ்பிளே
- ரெனோ 14 ப்ரோ மாடலில் 6.83-இன்ச்டிஸ்பிளே
- ரெனோ 14 மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்
- ரெனோ 14 ப்ரோ மாடலில் டைமன்சிட்டி 8450 சிப்செட்

- ரெனோ 14 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (50MP வைட் + 8MP அல்ட்ரா-வைட் + 50MP டெலிஃபோட்டோ)
- ரெனோ 14 ப்ரோ மாடலில் 2-ஆக்சிஸ் OIS உடன் அதே வைட், அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட் டோகேமராக்கள்
- ரெனோ 14 மாடலில் 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரி
- ரெனோ 14 ப்ரோ மாடலில் 80W SUPERVOOC வயர்டு மற்றும் 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜிங்குடன் 6200mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 13 Gets Price Cut in Flipkart After Oppo Reno 14 and Reno 14 Pro Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X