பலரும் எதிர்பார்த்த விலை.. 2 புது OPPO போன்கள்.. IP69 ரேட்டிங், 5800mAh பேட்டரி, Periscope கேமரானு அசத்துதே!
ஒப்போ (OPPO) நிறுவனமானது 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துடன் 2025 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. வருகிற ஜனவரி 9 ஆம் தேதியன்று, ஒப்போ நிறுவனம் ரெனோ 13 5ஜி சீரீஸ் (OPPO Reno 13 5G Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது
ஒப்போ ரெனோ 13 5ஜி சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 13 5ஜி (Oppo Reno 13 5G) மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி (Oppo Reno 13 Pro 5G) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாக உள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய அம்சங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ்விரு மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது.

ஒப்போ ரெனோ 13 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஏஎன் லீக்ஸ் (AN Leaks - @LeaksAn1) என்கிற எக்ஸ் பயனர் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒப்போ ரெனோ 13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மேலும் 8ஜிபி ரேம் + 2568ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ரெனோ 12 5ஜி ரூ.32,999 க்கும், ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ரூ.36,999 க்கும் அறிமுகமானது.
ஒப்போ ரெனோ 13 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? ஒப்போ ரெனோ 13 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு மாடல்களுமே மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 Chipset) மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் ஒப்போ ரெனோ 13 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங் (IP68 and IP69 ratings for dust and water resistance) உடன் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. முக்கிய வேறுபாட்டினை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்றே சிறிய 5,600mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது
மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்றே பெரிய 5,800mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒப்போ ரெனோ 13 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே 80W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3.5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆதரவை கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெண்ணிலா வேரியண்ட் ஆன ஒப்போ ரெனோ 13 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லை.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி மாடல் ஆனது கிராஃபைட் கிரே மற்றும் மிஸ்ட் லாவெண்டர் கலர்களில் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஐவரி ஒயிட் மற்றும் லுமினஸ் ப்ளூ ஆகிய கலர்களில் அறிமுமாகும். ஜனவரி 9 ஆம் தேதி நடக்கும் அறிமுகத்திற்கு பின்னர் ஒப்போ ரெனோ 13 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒப்போ இந்தியா (Oppo India) ஆகிய தளங்களின் வழியாக இந்தியாவில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








