OPPO வேற மாறி.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. AI போர்ட்ராய்டு கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும்படி ஏஐ கேமரா பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ 12எப் 5ஜி (OPPO Reno 12F 5G) போன் வெளியாகி இருக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரள விடுகிறது. அதுமட்டுமல்லாமல், பிரீமியம் லுக்கில் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த ஓப்போ ரெனோ 12எப் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள் இதோ.
ஓப்போ ரெனோ 12எப் 5ஜி அம்சங்கள் (OPPO Reno 12F 5G Specifications): இந்த ஓப்போவில் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) பிளாட் ஓஎல்இடி (Flat OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது.

மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2100 பீக் பிரைட்னஸ், டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் ஏஜிசி டிடி-ஸ்டார்2 (AGC DT-Star2) கவர் கிளாஸ் வருகிறது. இந்த ரெனோ மாடலில் ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. பிக்ஸ்ட் போகஸ் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.
ஏஐ போர்ட்ராய்டு சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, பேக்கிரவுண்ட் ரிமூவ் செய்ய ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), குயிக் கட் அவுட் செய்ய ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0), செல்பீயில் தீம், ஆர்டிஸ்டிக் போன்றவற்றை செய்து கொள்ள ஏஐ ஸ்டூடியோ (AI Studio) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன.
இந்த போனின் செல்பீ மற்றும் மெயின் கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. கலர்ஓஎஸ் 14.0.1 (ColorOS 14.0.1) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. 8 ஜிபி டைனாமிக் ரேக் உள்ளது.

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடல் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் 6300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 (Mali G57 MC2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஓப்போவில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.
டைப்-சி போர்ட் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் சென்சார் (In-display Optical Sensor) வருகிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), டைப்-சி இயர்போன் ஜாக் (Type-C Earphone Jack), என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ வருகிறது.
இந்த ஓப்போ ரெனோ 12எப் 5ஜி போனானது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அதேபோல தாய்லாந்து நாட்டிலும் வெளியாகி இருக்கிறது. அங்கு இந்த போனின் விலை ரூ.27,204 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவில் ஓப்போ ரெனோ 12 மற்றும் 12 ப்ரோ விரைவில் வெளியாக இருப்பதால், அதற்கு பிறகு இந்த 12எப் 5ஜி மாடலை இங்கு எதிர்பார்க்கலாம்.
இந்த போனில் ஆம்பர் ஆரஞ்ச் (Amber Orange) மற்றும் ஆலிவ் கிரீன் (Olive Green) ஆகிய 2 கலர்கள் வருகிறது. போர்ட்ராய்டு கேமரா மட்டுமல்லாமல், சாம்சங் போன்களில் வருவது போல கட்-அவுட், பெஸ்ட் டேக் போன்ற ஏஐ பீச்சர்களும் இந்த போன் கொண்டிருப்பதால், இந்திய பிரியர்களிடையே நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








