ஆர்டர் மிரளும்.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 45W பேட்டரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
கேமரா பிரியர்களுக்கான ஏஐ பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, ஆட்டோபோகஸ் மெயின் கேமரா, 32 எம்பி செல்பீ ஷூட்டர், 16 ஜிபி ரேம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட்டில் ஓப்போ ரெனோ 12எப் 4ஜி (OPPO Reno 12F 4G) விற்பனைக்கு வர இருக்கிறது. பிரீமியம் டிசைனில் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த ஓப்போ ரெனோ 12எப் 4ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ 12எப் 4ஜி அம்சங்கள் (OPPO Reno 12F 4G Specifications): இந்த ஓப்போவில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் ஏஜிசி டிடி-ஸ்டார்2 (AGC DT-Star2) டிஸ்பிளே புரொடெக்சன் வருகிறது. 50 எம்பி ஆட்டோபோகஸ் மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + பிக்சட்போகஸ் கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது.
இந்த ஓப்போ ரெனோ 12எப் 4ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 1080p வீடியோ ஷூட் மற்றும் வீடியோ ஜூமிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ஸ்டூடியோ (AI Studio) ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) போன்ற ஏஐ கேமரா பீச்சர்கள் வருகின்றன. ப்ரோ போர்ட்ராய்டு மோட் (Pro Portrait Mode) சப்போர்ட் உள்ளது.
2 வேரியண்ட்கள் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. ஆனால், எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்படவில்லை. டூயல் நானோ சிம் சிலாட் மட்டும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஓப்போ ரெனோ 12எப் 4ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14.0 (ColorOS 14.0) வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 4ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 685 4G SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.
இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் சப்போர்ட் உள்ளது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. அம்பர் ஆரஞ்சு, ஆலிவ் கிரீன் மற்றும் மேட் கிரே ஆகிய கலர்களில் வருகிறது.
மேற்கூறிய பீச்சர்களுடன் இந்த போனின் குளோபல் வேரியண்ட் மட்டும் வெளியாகி இருக்கிறது. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த ஓப்போ ரெனோ 12எப் போனின் 5ஜி வேரியண்ட்டின் விலை ரூ.27,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த போன் ரூ.20000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








