Home
Mobile

அடிச்சு நொறுக்கும் ஆர்டர்.. ரூ.4,000 ஆபர் விலையில் OPPO Reno 12 5ஜி SALE ஆரம்பம்!

கடந்த ஜூலை 12 ஆம் தேதி அறிமுகமான ஒப்போ ரெனோ 12 5ஜி (OPPO Reno 12 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. ஒப்போ ரெனோ 12 5ஜி மாடலானது ஒப்போ ரெனோ 12 5ஜி சீரிஸின் கீழ் அறிமுகமான வெண்ணிலா வேரியண்ட் ஆகும். இதே சீரீஸில் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (OPPO Reno 12 Pro 5G) என்கிற ப்ரோ வேரியண்ட்டும் உள்ளது. ப்ரோ வேரியண்ட்டின் விற்பனை ஏற்கனவே (ஜூலை 18 முதல்) தொடங்கிவிட்ட நிலையில், தற்போது வெண்ணிலா வேரியண்ட்டின் விற்பனையும் தொடங்கியுள்ளது.

ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதனுடன் அறிமுகமான ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இதற்கும் வெண்ணிலா வேரியண்ட்டிற்கும் என்ன வேறுபாடு? இதோ விவரங்கள்:

ரூ.4,000 ஆபர் விலையில் OPPO Reno 12 5ஜி SALE ஆரம்பம்!

ஒப்போ ரெனோ 12 5ஜி VS ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 14.1 மூலம் இயங்குகின்றன. மேலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 3 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:9 ரேஷியோ, எச்டிஆர்10பிளஸ் ஆதரவு மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. டிஸ்பிளேவில் உள்ள முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, ப்ரோ மாடலானது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 உடனும், ஸ்டாண்டர்ட் மாடலானது கார்னிங் கொரில்லா 7ஐ உடனும் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் (Octa-core MediaTek Dimensity 7300-Energy SoC) மூலம் இயங்குகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியிலான 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்க ஆதரவும் கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகின்றன. சென்சார்களில் உள்ள வேறுபாடுகளை பொறுத்தவரை, ப்ரோ மாடலில் ஓஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி ப்ரைமரி சோனி எல்ஒய்டி 600 சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி சாம்சங் எஸ்5கேஜேஎன்5 டெலிஃபோட்டோ சென்சார் + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி சாம்சங் எஸ்5கே ஜேஎன்5 செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.

வெண்ணிலா வேரியண்ட் ஆன ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் உடன் அதே 50எம்பி சோனி எல்ஒய்டி600 ப்ரைமரி சென்சாரை பேக் செய்கிறது. ஆனால் மீதமுள்ள சென்சார்கள் முற்றிலும் வேறுபடுகின்றன. அவைகள் 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 355 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்களாக உள்ளன. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart), ஒப்போ இணையதளம் மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, டிபிஎஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டுகள் வழியிலான நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.4000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ.28,999 க்கு கொண்டுவர முடியும். மேலே குறிப்பிடப்பட்ட அதே கிரெடிட் கார்டுகள் வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.36,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.40,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பேஸ் பிரவுன் மற்றும் சன்செட் கோல்ட் கலர்களில் (முன்னரே குறிப்பிட்டபடி) கடந்த ஜூலை 18 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 12 Sale Started in India via Flipkart Check Out Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X