Home
Mobile

நெட்வொர்க் இல்லாத நேரத்தில் வாக்கி-டாக்கி போல செயல்படும் 2 OPPO போன்கள்.. ஜூலை 12ல் அறிமுகம்.. என்ன விலை?

சரியாக 2 வாரங்களுக்கு முன்னர் உலக சந்தைகளில் அறிமுகமான ஒப்போ (Oppo) நிறுவனத்தின் ரெனோ 12 சீரிஸ் (Reno 12 Series) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று ஒப்போ ரெனோ 12 சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 12 5ஜி (Oppo Reno 12 5G) மற்றும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (Oppo Reno 12 Pro 5G) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன

கடந்த சில தினங்களாக "கம்மிங் சூன் டூ இந்தியா" என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்போன்கள், ஜூலை 12 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

நெட்வொர்க் இல்லாத நேரத்தில் வாக்கி-டாக்கி போல செயல்படும் OPPO போன்கள்!

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை.. ஒப்போ ரெனோ 12 சீரீஸில் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் கேமரா செட்டப், 5000எம்ஏஎச் பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்ற சில உயர்நிலை அம்சங்கள் இடம்பெறும். இதுதவிர்த்து ஒப்போ ரெனோ 12சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஹைலைட் ஆக அதன் ஏஐ ஸ்மார்ட்ஸ் இருக்கும்.

ஏஐ பெஸ்ட் ஃபேஸ் (AI Best Face), ஏஐ ஏரேசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ஸ்டுடியோ (AI Studio), ஏஐ சம்மரி (AI Summary) மற்றும் ஏஐ க்ளியர் ஃபேஸ் (AI Clear Face) உள்ளிட்ட பில்ட்-இன் ஏஐ அம்சங்களின் தொகுப்பே ஏஐ ஸ்மார்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இதோடு சேர்த்து ஒப்போ ரெனோ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பீகார்லிங்க் (BeaconLink) என்கிற பிரத்யேக தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நெட்வொர்க் செயலிழப்பின் போது ப்ளூடூத் மூலம் தடையற்ற ஒன்-டூ-ஒன் வாய்ஸ் கால்களை இயக்குவதன் மூலம் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இது நெட்வொர்க் இல்லாத சூழலில் வாக்கி-டாக்கி போல செயல்படும்

கடைசியாக ஒப்போ ரெனோ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜுக்கான ஆதரவுடன் வரும். ஒப்போ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை வெறும் 46 நிமிடங்களில் சார்ஜ் செய்யம். கூடுதலாக, சின்ஹா ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இருக்கும், இது பயனர்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில பேட்டரி லைஃப்பை பாதுகாக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை.. ஒப்போ ரெனோ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு ஓஎல்இடி டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன. பேஸிக் வேரியண்ட் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பை பெறுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

இரண்டுமே மீடியாடெக் டைமன்சிட்டி 7300-எனர்ஜி சிப்செட், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 14.1 ஓஎஸ் உடன் வருகின்றன. கேமராக்களை பொறுத்தவரை, பேஸிக் வேரியண்ட் ஆனது 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 8-மெகாபிக்சல் சென்சார் + 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல்செல்பீ கேமரா உள்ளது.

ப்ரோ வேரியண்ட் ஆனது பேஸிக் வேரியண்ட்டை போலவே ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைட் கேமராக்களை கொண்டுள்ளது. ஆனால் மூன்றாவது கேமரா 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆக இருக்கிறது. மேலும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது 50 மெகாபிக்சல் சென்சார் ஆக இருக்கிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.. உலக சந்தைகளில் ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,700 க்கும், ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.53,700 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்ற விலை நிர்ணயத்தை, அதாவது ரூ.40,000 முதல் ரூ.50,000 க்குள் என்கிற விலைகளை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். க்ளோபல் வேரியண்ட்களை போலவே ஒப்போ ரெனோ 12 ஆனது ஆஸ்ட்ரோ சில்வர் மற்றும் மேட் பிரவுன் வண்ணகளிலும், ப்ரோ வேரியண்ட் ஆனது நெபுலா சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிரவுன் ஷேட்களிலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 12 Reno 12 Pro India Launch Date July 12 Price Specifications All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X