தொக்கா ரூ.17,000 விலை குறைப்பு.. 12GB ரேம், 80W சார்ஜிங், 50MP OIS சோனி கேமரா கொண்ட OPPO போன் மீது!
ஒப்போ நிறுவனம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதியன்று அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸை சீனாவில் அறிமுகம் செய்வுள்ளது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் ஆகும். இதன்கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்8எஸ் (Oppo Find X8s), ஒப்போ பைண்ட் எக்ஸ்8எஸ் பிளஸ் (Oppo Find X8s Plus) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (Oppo Find X8 Ultra) ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இப்போதைக்கு இந்த 3 புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய அறிமுகம் மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் பகிரப்படவில்லை. இதுகுறித்த விவரங்கள் நிச்சயம் அறிவிக்கப்படும். நினைவூட்டும் வண்ணம் தற்போது இந்தியாவில் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 (OPPO Find X8) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ் ப்ரோ (Find X8 Pro) ஆகிய 2 மாடல்களும் முறையே ரூ.65,999 மற்றும் ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கின்றன.

இது ஒருபக்கம் இருக்க ஒப்போவின் இன்னொரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆன ரெனோ சீரிஸின் கீழ் அறிமுகமான ஒரு மாடல், தற்போது அபாரமான தள்ளுபடி விலையில் வாங்க.கிடைக்கிறது. அது ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (Oppo Reno 12 Pro 5G) மாடலாகும். தற்போது இது பிளிப்கார்ட் வலைதளத்தில் 31% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.53,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 14.1 மூலம் இயங்குகிறது. ஒப்போவின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்.
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:9 ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட்டை பொறுத்தவரை, இது 12ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் (Octa-core MediaTek Dimensity 7300-Energy SoC) மூலம் இயங்குகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியிலான 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்க ஆதரவும் கிடைக்கும்.
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. இதில் 8எம்பி சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி சாம்சங் S5KJN5 டெலிஃபோட்டோ சென்சார் உடன் OIS ஆதரவு கொண்ட 50எம்பி ப்ரைமரி Sony LYT600 சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி Samsung S5KJN5 செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை, இது 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. ஒப்போ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆனது 46 நிமிடங்களில் பேட்டரியை 1 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக நிரப்பும்.
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய ஏஐ அம்சங்களை பொறுத்தவரை, இது ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்ட் சம்மரி, ஏஐ கிளியர் வாய்ஸ், ஏஐ ரைட்டர் மற்றும் ஏஐ ஸ்பீக் உள்ளிட்ட ஏஐ அம்சங்களுடனும், ஏஐ பெஸ்ட் ஃபேஸ் மற்றும் ஏஐ ஏரேர்2.0 உள்ளிட்ட ஏஐ கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது


Click it and Unblock the Notifications








