ஆட்டம் ஆரம்பம்.. அப்பர் மிட்-ரேன்ஜ்ல இனி இதான் கிங்கு.. அடிச்சு தூக்கும் விலையில் 2 OPPO போன்கள் அறிமுகம்!
ஒப்போ நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான ரெனோ சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது ஒப்போ ரெனோ 12 5ஜி (Oppo Reno 12 5G) மற்றும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (Oppo Reno 12 Pro 5G) மாடல்கள் ஆகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? இவ்விரு மாடல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கின்றன? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஒப்போ ரெனோ 12 5ஜி மற்றும் ரெனோ 12 ப்ரோ 5ஜி-யின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 14.1 மூலம் இயங்குகின்றன. ஒப்போவின் கூற்றுப்படி, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 3 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:9 ரேஷியோ, HDR10+ ஆதரவு மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் FHD+ (1080 x 2412 பிக்சல்ஸ்) குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன. டிஸ்பிளேவில் உள்ள முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, ப்ரோ மாடலானது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 உடனும், ஸ்டாண்டர்ட் மாடலானது கார்னிங் கொரில்லா 7ஐ உடனும் வருகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 12GB வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் (Octa-core MediaTek Dimensity 7300-Energy SoC) மூலம் இயங்குகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியிலான 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்க ஆதரவும் கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகின்றன. வேறுபாடுகளை பொறுத்தவரை, ப்ரோ மாடலில் 8எம்பி சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி சாம்சங் S5KJN5 டெலிஃபோட்டோ சென்சார் உடன் OIS ஆதரவு கொண்ட 50எம்பி ப்ரைமரி Sony LYT600 சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி Samsung S5KJN5 செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது OIS உடன் அதே 50 மெகாபிக்சல் Sony LYT600 பிரைமரி சென்சாரை பேக் செய்கிறது. ஆனால் மீதமுள்ள சென்சார்கள் முற்றிலும் வேறுபடுகின்றன. பிரைமரி கேமராவுடன் 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 355 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 12 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கின்றன. ஒப்போவின் கூற்றுப்படி இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆனது 46 நிமிடங்களில் பேட்டரியை 1 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக நிரப்பும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இரண்டுமே ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்ட் சம்மரி, ஏஐ கிளியர் வாய்ஸ், ஏஐ ரைட்டர் மற்றும் ஏஐ ஸ்பீக் உள்ளிட்ட ஏஐ அம்சங்களுடனும், ஏஐ பெஸ்ட் ஃபேஸ் மற்றும் ஏஐ ஏரேர்2.0 உள்ளிட்ட ஏஐ கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.36,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.40,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பேஸ் பிரவுன் மற்றும் சன்செட் கோல்ட் கலர்களில் ஜூலை 18 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.
மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆஸ்ட்ரோ சில்வர், மேட் பிரவுன் மற்றும் சன்செட் பீச் கலர்களில் ஜூலை 25 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒப்போ இந்தியா (Oppo India) இணையதளம் வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








