Home
Mobile

மார்கெட் மிரளும்.. பட்ஜெட்ல 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஓப்போ ரெனோ 11எப் 5ஜி (Oppo Reno 11F 5G) போனின் கேமரா, கலர் மற்றும் டிசைன் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு எப்போது? விலை எவ்வளவு இருக்கும்?

ஓப்போ ரெனோ 11எப் போனானது, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதனால், அந்த போன் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி மார்கெட் வட்டாரங்களை மிரளவிட்டு வருகிறது. இப்போது, டிசைன், கலர் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பட்ஜெட்ல 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 67W சார்ஜிங் போன்!

இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ ஓப்போ பக்கத்தில் இந்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த போனானது, ஓப்போ எப்25 (Oppo F25) ஆக ரீ-பிராண்ட் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியாக இருக்கிறது. வரும் பிப்ரவரியில் அந்த போனின் வெளியீடு இருக்கலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதுவரையில், கிளோசி ஃபினிஷிங் (Glossy Finish) கொண்ட பிங்க் (Pink), கிரீன் (Green) ஆகிய 2 கலர் வேரியண்ட்கள், ஓப்போவின் பிரத்யேக போர்ட்ராய்டு (Portrait) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) போன்ற விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கேமரா சென்சார்கள், சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மார்கெட் வட்டாரங்களில் ஏற்கனவே கசிந்துள்ளன. இந்த அம்சங்களானது, இந்திய ஓப்போ பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக இருக்கிறது. இந்த கசிந்த அம்சங்களையும் விலை விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

ஓப்போ ரெனோ 11எப் 5ஜி அம்சங்கள் (Oppo Reno 11F 5G Specifications): இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7050 SoC) சிப்செட் வருகிறது. அதோடு கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) வருகிறது.

இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுஎல்எச்டி பிளஸ் (FHD+) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது.

டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom ported Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. அதேபோல இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP67 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.

ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX55) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த மேக்ரோவில் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (OmniVision OV02B10) சென்சார் வருகிறது.

அதேபோல சோனி ஐஎம்எஸ்க்165 (Sony IMX615) சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், ரூ.24,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 11F 5G With Triple Rear Camera, Two Colour Options Officially Teased Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X