Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 64MP கேமரா.. OLED டிஸ்பிளே.. அறிமுகமானது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் ஒருவழியாக ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துவிட்டது. டைமன்சிட்டி சிப்செட், 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஓப்போ ரெனோ 11எப் 5ஜி அம்சங்கள் (Oppo Reno 11F 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்இ பாண்டா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

மார்க்கெட்டே மிரள போகுது.. 64MP கேமரா.. அறிமுகமானது ஒப்போ 5ஜி போன்..

8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

64எம்பி OmniVision OV64B பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி IMX615 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 7050 (Dimensity 7050) சிப்செட் வசதியுடன் ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கலர்ஒஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குளத வசதியுடன் ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன்.

பாம் கிரீன் (Palm Green), ஓஷன் ப்ளூ (Ocean Blue), கோரல் பர்பிள் (Coral Purple), ஆகிய நிறங்களில் ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மார்க்கெட்டே மிரள போகுது.. 64MP கேமரா.. அறிமுகமானது ஒப்போ 5ஜி போன்..

IP65 ரேட்டிங் கொண்டுள்ளது ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 177 கிராம் ஆகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

அதேபோல் ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது தாய்லாந்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். குறிப்பாக ஓப்போ ரெனோ 11எப் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை THB 10,990 (இந்திய மதிப்பில் ரூ.25,490) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 11F 5G launched with 120Hz OLED display, 64MP triple cameras: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X