Home
Mobile

ஃபயரு பட்ஜெட்.. மிரளும் SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, ஓம்னிவிஷன் செல்பீ ஷூட்டர், 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ஓப்போ ரெனோ 11எப் 5ஜி (Oppo Reno 11F 5G) போனின் வெளியீட்டு விவரங்கள் கசிந்துள்ளன.

ஓப்போ ரெனோ 11எப் 5ஜி அம்சங்கள் (Oppo Reno 11F 5G Specifications): இந்த ஓப்போ போனில் 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுஎல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மிரளும் SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டுள்ளது. அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7050 SoC) சிப்செட் வருகிறது. இந்த போனில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom ported Speakers) வருகின்றன.

இந்த ஓப்போ ரெனோ 11எப் போனில் மிரளவிடும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX55) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

மிரளும் SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி!

அதேபோல 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (OmniVision OV02B10) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எஸ்க்165 (Sony IMX615) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. IP67 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ ரெனோ 11எப் போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் வருகிறது.

இந்த ஓப்போவில் 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.2, வை-பை 802, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனில் பிங்க் (Pink), கிரீன் (Green) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய மூன்று கலர் வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த ஓப்போ ரெனோ 11எப் போனானது, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தியாவில் ஓப்போ எப்25 (Oppo F25) ஆக ரீ-பிராண்ட் செய்யப்பட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த போன் மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்டிருப்பதால், ரூ.24,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. பக்காவான கேமரா, சிப்செட், பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் மற்றும் கலர் மேல் ஆர்வம் கொண்ட ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த ஓப்போ எப்25 போன் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 11F 5G 16GB RAM, Dimensity 7050 To Launch in India on February Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X