மார்கெட்டே மிரண்டுடுச்சு.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. SONY கேமரா.. 32MP டெலி.. எந்த மாடல்?
இந்திய கேமரா பிரியர்கள் மட்டுமல்லாமல், ப்ரீமியம் லுக் பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக சோனி சென்சார் கேமரா, 32எம்பி டெலிபோட்டோ, ஓஎல்இடி டிஸ்பிளே, 67W சார்ஜிங், 4800mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ஓப்போ ரெனோ 11 (OPPO Reno 11) போன் வெளியாகயிருக்கிறது.
ஓப்போ ரெனோ 11 அம்சங்கள் (OPPO Reno 11 Specifications): இந்த ஓப்போ ரெனோவில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) கர்வ்ட் டிஸ்பிளே (Curved Display) வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ளது. மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஓப்போ ரெனோ 11 போனில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா சோனி எல்ஓய்டி600 (Sony LYT600) சென்சாருடன் வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (SONY IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்709 (SONY IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

இந்த மெயின் கேமராவில் 2X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) சப்போர்ட் உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கேமராவில் அல்ட்ரா ப்ரீமியம் குவாலிட்டியை எதிர்பார்க்கலாம். இந்த போனில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது.
அதோடு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. எஸ்டி கார்டு சாப்போர்ட் கொடுக்கப்படவில்லை. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த ஓப்போ போனில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது.
அதேபோல இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது. டைப் - சி சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ஓப்போ போன் ஸ்லிம் டிசைனில் 184 கிராம் எடை மற்றும் 7.59 தடிமன் கொண்டிருக்கிறது.
இந்த போனில் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. அதேபோல 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4ஜி (Dual 4G) கொண்டிருக்கிறது. இந்த ரெனோவில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), ஃப்ளோரைட் ப்ளூ (Fluorite Blue) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன.
இந்த அம்சங்களுடன் சீனாவில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இதனால், மற்ற நாடுகளில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த சூழலில் வரும் ஜனவரி 11ஆம் தேதி சர்வதேச சந்தையில் வெளியாகிறது. அந்த தேதியிலேயே இந்தியாவிலும் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போனின் சீன விலை நிர்ணயத்தை பொறுத்தவரையில், 8ஜிபி+256ஜிபி வேரியண்ட் விலை ரூ.29,675ஆகவும் 12ஜிபி+256ஜிபி வேரியண்ட் விலை ரூ.33,235ஆகவும் இருக்கிறது. இதே விலையில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








