Home
Mobile

மிரளுது மார்கெட்.. ரூ.29,675 போதும்.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 4800mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமான பட்ஜெட்டில் ஓப்போ ரெனோ 11 (OPPO Reno 11) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு 16 ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற அம்சங்களில் பின்னியெடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஓப்போ ரெனோ 11 அம்சங்கள் (OPPO Reno 11 Specifications): இந்த ஓப்போ போன் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) வருகிறது.

மிரளுது மார்கெட்.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4800mAh பேட்டரி!

அதேபோல கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கும் மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ மாடலில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஓஎல்இடி கர்வ்ட் டிஸ்பிளே (OLED Curved Display) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த ஓப்போ ரெனோ 11 போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. ஆகவே, சோனி எல்ஓய்டி600 (Sony LYT600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும். அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்355 (SONY IMX355) சென்சாருடன் வருகிறது.

மிரளுது மார்கெட்.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4800mAh பேட்டரி!

இறுதியாக சோனி ஐஎம்எக்ஸ்709 (SONY IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ஆர்ஜிபிடபுள்யூ (RGBW)மாடலாகும்.

இந்த ஓப்போ போனில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), புளோரைட் ப்ளூ (Fluorite Blue) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதுவொரு கர்வ்ட் டிஸ்பிளே போன் என்பதால் மிகவும் ஸ்லிம் டிசைனில் 184 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது.

இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப் - சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ போனில் இன்பிராரெட் சென்சார் (infrared sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில் 5ஜி என்எஸ்ஏ (5G NSA), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.

மிரளுது மார்கெட்.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4800mAh பேட்டரி!

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,675ஆகவும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,235ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 23) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. மிட்-ரேஞ்ச் விலையில் பிரம்மாண்ட கேமரா வேண்டுமானால், இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
OPPO Reno 11 With 12GB RAM, Dimensity 8200 Sale From December 1 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X