Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. ரெடியான ரெனோ 11.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எப்போது வெளியீடு?

இந்திய கேமரா பிரியர்கள் எதிர்பார்த்த ஓப்போ ரெனோ 11 சீரிஸ் (OPPO Reno 11 Series) போன்களின் வெளியீடு கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில், அந்த மாடல்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் விவரம் இதோ.

ஓப்போ ரெனோ 11, ரெனோ 11 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 11, Reno 11 Pro Specifications): இந்த ரெனோ 11 சீரிஸ் போன்களில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. ரெனோ 11 போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் வருகிறது.

ரெடியான ரெனோ 11.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்!

ரெனோ 11 ப்ரோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் வருகிறது. 2 போன்களிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) சப்போர்ட் வருகிறது.

அதேபோல ரெனோ 11 போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. ரெனோ 11 ப்ரோ போனில் 12 ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட் வர இருக்கின்றன.

இந்த ஓப்போ ரெனோ 11 மாடலில் சோனி எல்ஓய்டி600 (Sony LYT600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (SONY IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 (SONY IMX709) சென்சாருடன் 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

ரெடியான ரெனோ 11.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்!

சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. அதேபோல ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 எம்பி டெலி போட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது. ரெனோ 11 போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது. ப்ரோ போனில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு போன்களிலும் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. அதோடு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டிருக்கிறது.

ரெனோ 11 சீரிஸ் போன்களில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver) ஆகிய 3 கலர்கள் இருக்கின்றன. மேற்கூறிய அம்சங்கள் சீனாவில் வெளியான போன்களுடையது. இதே அம்சங்கள் இந்திய வேரியண்ட்களிலும் வரும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் கிரீன் மற்றும் சில்வர் வேரியண்ட்கள் மட்டும் வெளியாக இருக்கின்றன. சீனாவில் ரெனோ 11 போனின் ஆரம்ப விலை ரூ.29,675ஆகவும், ரெனோ 11 ப்ரோ போனின் விலை ரூ.41,100ஆகவும் இருக்கிறது. இதே விலையில், இந்தியாவில் வெளியாகலாம். இந்த போனுக்கான லைவ் பேஜ் பிளிப்கார்ட் இந்தியா தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் ஓப்போ இந்தியா நிறுவனமே அதை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது. கேமரா பிரியர்களிடையே இந்த ஓப்போ ரெனோ 11 சீரிஸ் போன்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. அதற்கு கேமரா மட்டுமல்லாமல், கம்மியான பட்ஜெட்டும் காரணம் என்றே சொல்லலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 11 Series Tipped To Launch January 11 in India Sale Via Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X