Home
Mobile

மிரளுது மார்கெட்.. 32MP டெலிபோட்டோ.. 12GB ரேம்.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பிராண்ட் பிரியர்களின் எதிர்பார்ப்பையும் எகிறவிட்ட ஓப்போ ரெனோ 11 சீரிஸ் (Oppo Reno 11 Series) போன்களின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்துள்ளன. இந்த அம்சங்கள் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ அம்சங்களாக இருக்க வாய்ப்புள்ளது.

ஓப்போ ரெனோ 11 அம்சங்கள் (Oppo Reno 11 Specifications): இந்த போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட டைமன்சிட்டி 8200 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு காலர்ஓஎஸ் 13 சப்போர்ட் வருகிறது.

மிரளுது மார்கெட்.. 32MP டெலிபோட்டோ.. 12GB ரேம்.. 4700mAh பேட்டரி!

இந்த போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆகிய 3 வேரியண்ட் கொண்டிருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. அதோடு டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

ஆகவே, சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 32 எம்பி டெலிபோட்டடோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் கேமரா மாடலாகும். 184 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இந்த போன் அப்சிடியன் பிளாக், மூன்லைட் ஒயிட் மற்றும் ஃப்ளோரைட் ப்ளூ ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.32,450ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.34,750 ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.37,050ஆக இருக்கிறது.

மிரளுது மார்கெட்.. 32MP டெலிபோட்டோ.. 12GB ரேம்.. 4700mAh பேட்டரி!

ஓப்போ ரெனோ 11 ப்ரோ அம்சங்கள் (Oppo Reno 11 Pro Specifications): இந்த ப்ரோ போனில் 6.74 இன்ச் அமோலெட் கர்வ்ட் எட்ஜ் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த போனிலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் 14 கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனிலும் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த மாடலில் அப்சிடியன் பிளாக், மூன்லைட் ஒயிட் மற்றும் டர்க்கைஸ் ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் 256 மெமரி மாடலின் விலை ரூ.46,350ஆக இருக்கிறது.

அதேபோல 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.46,350ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்கள் வரும் நவம்பர் 23ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. டிசம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இதனிடையே மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யும் பணியில் ஓப்போ நிறுவனம் ஈடுபட இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 11, Reno 11 Pro Specifications, Price Revealed Ahead November 23 Launch in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X