Home
Mobile

வெயிட்டிங் ஓவர்.. ஜனவரியில் சம்பவம்.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த போன்?

ஓப்போ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் காத்திருக்க வைத்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனின் இந்திய வெளியீட்டு விவரங்கள் கசிந்துள்ளது. சோனி கேமரா, 20x டிஜிட்டல் ஜூமிங், ஓஎல்இடி டிஸ்பிளே, 80W சார்ஜிங் போன்ற அம்சங்களில் இந்த போன் பின்னியெடுக்கிறது.

ஓப்போ ரெனோ 11 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 11 Pro Specifications): இந்த ஓப்போ போனில் 6.7 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கர்வ்ட் ஓஎல்இடி (OLED) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

வெயிட்டிங் ஓவர்.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங் போன்!

அதோடு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் ( Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் வருகிறது. கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டிருக்கிறது.

அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் வருகிறது. அதேபோல கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த ஓப்போவில் 12 ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட் இருக்கிறது.

இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனின் கேமரா அல்ட்ரா ப்ரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி டெலி போட்டோ கேமரா வருகிறது.

வெயிட்டிங் ஓவர்.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங் போன்!

மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது. இமேஜ் நாய்ஸ் ரெடக்சன் சப்போர்ட்டுக்காக மரிசிலிகான் எக்ஸ் என்பியு (MariSilicon X NPU) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 2x ஆப்டிகல் ஜூமிங், 20x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது.

அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் மல்டி-வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 எம்பி செல்பீ வருகிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இந்த ஓப்போ ரெனோ மாடலில் 4700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

யுஎஸ்பி டைப்-சி (Type-C) சார்ஜிங் கொண்டிருக்கிறது. அதேபோல டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டுள்ளது.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver) ஆகிய 3 கலர்கள் வருகிறது. இதன் 12ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.41,100ஆகவும், 12ஜிபி+512ஜிபி மாடலின் விலை ரூ.44,625ஆகவும் இருக்கிறது.

ஏற்கனவே, சீனாவில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், மற்ற நாடுகளில் எதிர்பார்ப்பு அதிகரித்ததது. இந்த சூழலில் வரும் ஜனவரி 11ஆம் தேதி அந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போதே சர்வதேச வெளியீடும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் சில மாற்றங்களோடு இந்த போன் வெளியாகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 11 Pro With 50MP Camera, 4700mAh Battery India Launch on January 11 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X