மிரட்ட வருகிறது.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜ்.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரம்மாண்ட கேமரா மற்றும் பேட்டரி செட்டப் கொண்டிருக்கும் ஓப்போ ரெனோ 11 ப்ரோ (OPPO Reno 11 Pro) மற்றும் ஓப்போ ரெனோ 11 (OPPO Reno 11) போன்களின் அம்சங்கள் கசிந்துள்ளன. இந்த கசிந்த அம்சங்கள், வெளியீட்டு விவரங்கள் இதோ.
ஓப்போ ரெனோ 11 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 11 Pro Specification): இந்த ப்ரோ மாடலில் 6.74 இன்ச் கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160 PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 எஸ்ஓசி (Octa Core Snapdragon 8+ Gen 1 SoC) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColourOS14 OS) வருகிறது. இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனில் டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) வருகிறது.
அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.
இதுவொரு 2X ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும். அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் (In-Display Fingerprint) சப்போர்ட் வருகிறது. கேமராவை போலவே மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக பேட்டரி சிஸ்டம் வருகிறது. ஆகவே, 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4700mAh கொண்டிருக்கிறது.

மேலும், டூயஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker), என்எப்சி (NFC), எக்ஸ்-லைனர் மோட்டார் (X-Linear Motor) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் பிளாஸ்டிக் பிரேம் (Plastic Frame) கொண்டுள்ளது. பேட்டரியோடு சேர்த்து 190 கிராம் எடை இருக்கிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.35,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஓப்போ ரெனோ 11 அம்சங்கள் (OPPO Reno 11 Specification): இந்த போனானது, 6.74 இன்ச் பன்ச்ஹோல் கர்வ்ட் ஓஎல்இடி (Punch-hole curved OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. முந்தைய மாடலை போலவே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது.
அதேபோல ஆக்டா கோர் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி (Octa Core Dimensity 8200 SoC) சிப்செட் கொண்டுள்ளது. இந்த போனிலும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, சோனி லிடியா எல்ஓய்டி600 (Sony Lytia LYT600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Somy IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவும் ஓஐஎஸ் மாடலாகும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனில் ஓப்போ ரெனோ 11 போனில் 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.28,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இரண்டு போன்களும் அடுத்த வாரத்தில் வெளியாகின்றன. நவம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications