அப்படி போடு.. ஜூலை 12-க்கு முன் அவசர அவசரமாக விலை குறைக்கப்பட்ட OPPO 5G Phone.. என்ன மாடல்? ஏன்?
ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ரெனோ 12 சீரீஸ் (Reno 12 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. ஒப்போ ரெனோ 12 மற்றும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 12 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலைபாட்டில், இதே சீரிஸின் கீழ் முன்னதாக வெளியான ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) ஸ்மார்ட்போனின் விலை அதிகாரபூர்வமாக குறைக்கப்பட்டு உள்ளது.
ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய விலை நிர்ணயம்: நினைவூட்டும் வண்ணம் ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போனை கடந்த 2024 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில் இது ரூ.39,999 க்கு வாங்க கிடைத்தது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு, ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த புதிய விலை நிர்ணயம் ஒப்போ இந்தியா வலைத்தளம் (Oppo India Website) மற்றும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய இரண்டிலுமே பிரதிபலிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பேர்ல் ஒயிட் மற்றும் ராக் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் உடனான 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
இந்த மிட்-ரேன்ஜ் ஒப்போ ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி சென்சார் + எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒப்போ ரெனோ 12 சீரிஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ரெனோ 12 சீரீஸின் சரியான விலை விவரங்கள் ஒப்போ பிராண்டால் இன்னும் வெளியிடப்படவில்லை. எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒப்போ ரெனோ 12 சீரிஸின் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடனான 6.7-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கும். ஸ்டாண்டர்ட் வேரியண்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பும், ப்ரோ வேரியண்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பும் இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இரண்டுமே மீடியாடெக் 7300 எனர்ஜி சிப்செட்களுடன் வரும். ஓஎஸ்-ஐபொருத்தவரை, இரண்டுமே ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14.1 மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் வேரியண்டில் 50எம்பி OIS ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா இருக்கும்; முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கும்.
ப்ரோ வேரியண்டில் 50எம்பி OIS ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 50எம்பி டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உடனான 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








