சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 2 ஒப்போ போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் ஒருவழியாக இந்தியாவில் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்துவிட்டது. குறிப்பாக இந்த போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
ஒப்போ ரெனோ 11 அம்சங்கள் (OPPO Reno 11 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் டைமன்சிட்டி 7050 சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு கலர் ஒஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஐஆர் பிளாஸ்டர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா(Sony LYT600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno 11 Pro 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 x 2412 பிக்சல்ஸ் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
டைமன்சிட்டி 8200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கலர் ஒஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. அதேபோல் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஐஆர் பிளாஸ்டர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 4700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா (Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.

புதிய ஒப்போ போன்களின் விலை: 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 11 5ஜி போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி கொண்ட ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
ஒப்போ ரெனோ 11 5ஜி போன் வேவ் கிரீன் (Wave Green) மற்றும் ராக் கிரே (Rock Grey) நிறங்களில் கிடைக்கும். பின்பு ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஆனது பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் ராக் கிரே ( Rock Grey) நிறங்களில் வாங்க முடியும். இன்று முதல் பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஸ்டோர்களில் இந்த போனை முன்பதிவு செய்ய முடியும். வரும் ஜனவரி 18-ம் தேதி ரெனோ 11 ப்ரோ 5ஜி மாடலும், ஜனவரி 25-ம் தேதி ரெனோ 11 5ஜி மாடலும் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








