அதிரவிடும் விலை.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. அறிமுகமானது ஒப்போ போன்கள்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ரெனோ 11 5ஜி மற்றும் ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ ரெனோ 11 5ஜி அம்சங்கள் (OPPO Reno 11 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர்ஸ், எச்டிஆர் பிளஸ் ஆதரவு, AGC DT-Star2 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 7050 சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு கலர் ஒஎஸ் 13.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒப்போ ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஐஆர் பிளாஸ்டர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno 11 Pro 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர்ஸ், எச்டிஆர் பிளஸ் ஆதரவு, AGC DT-Star2 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
தரமான டைமன்சிட்டி 8200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கலர் ஒஎஸ் 13.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்;கேனர், ஐஆர் பிளாஸ்டர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 4600எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
தற்போது ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன்கள் வியட்நாமில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 11 5ஜி ஆனது இந்திய மதிப்பில் ரூ.37,386 விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி மாடல் ரூ.57,908 விலையில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








