Home
Mobile

வாடா செல்லம்.. இப்படி ஒரு போனுக்கு பல பேர் இங்க வெயிட்டிங்.. வெயிட்டு கேமரா, முரட்டு சிப்செட்.. என்ன மாடல்?

நல்ல அவுட்புட்களை வழங்கும் கேமரா செட்டப்பையும், நல்ல பெர்ஃபார்மென்ஸை வழங்கும் சிப்செட்டையும் கொண்ட ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன்களை (All-rounder Smartphones) தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? ஆம் என்றால், தயாராக இருங்கள். அப்படியான 2 ஸ்மார்ட்போன்கள் வருகிற நவம்பர் 23 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அதென்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது ஒப்போ ரெனோ 11 சீரீஸ் (Oppo Reno 11 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இதன்கீழ் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இப்படி ஒரு போனுக்கு பல பேர் இங்க வெயிட்டிங்.. என்ன மாடல்?

இந்திய அறிமுகம்? சீன அறிமுகத்தை தொடர்ந்து இவ்விரு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால் ஒப்போ ரெனோ 10 சீரிஸின் கீழ் அறிமுகமான 3 மாடல்களுமே (ரெனோ 11, ரெனோ 11 ப்ரோ, ரெனோ 11 ப்ரோ பிளஸ்) இந்தியாவிலும் வெளியாகின.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஒப்போ ரெனோ 11 சீரிஸின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், ஒப்போ நிறுவனம் அதன் சமூக ஊடக சேனல்களின் வழியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய அம்சங்களை பகிர்ந்து வருகிறது; குறிப்பாக வெண்ணிலா வேரியண்ட் ஆன ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போனின் அம்சங்களை!

இப்படி ஒரு போனுக்கு பல பேர் இங்க வெயிட்டிங்.. என்ன மாடல்?

ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) கொண்டு இயங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்களுடன் ஒற்றுப்போகிறது. ரெனோ 11 ஆனது ரெனோ 10 ப்ரோ மாடலில் உள்ள சிப்செட்டை தான் பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் எஸ்எல்ஆர்-லெவல் போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 47மிமீ ஃபோக்கல் லெங்த் கொண்ட 32-மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை கொண்டுருக்கும் என்றும் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

இப்படி ஒரு போனுக்கு பல பேர் இங்க வெயிட்டிங்.. என்ன மாடல்?

ஒப்போ 11 ஸ்மார்ட்போன் ஆனது ஒப்போ ஃபைண்ட் சீரிஸில் நாம் கண்ட ஃபிளாக்ஷிப் இமேஜிங் அல்காரிதம்களை கொண்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே ஒப்போ நிறுவனமானது ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோவில் எடுக்கப்பட்ட சில கேமரா சாம்பிள்களையும் பகிர்ந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா யூனிட்டின் செயல்திறனை காட்சிப்படுத்துகின்றன. போர்ட்ரெய்ட் மோட்-இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், புதிய 'எஸ்எல்ஆர்-லெவல் போர்ட்ரெய்ட் லென்ஸின்' கேமரா முன்னேற்றங்களையும், பிரகாசமான வெளிப்புற நிலைகளில் அதன் ரேன்ஞையும் எடுத்துக்காட்டுகின்றன.

விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.34,990 க்கும், ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.47,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். இவ்விரு போன்களுடன் ஒப்போ பேட் ஏர் 2 (Oppo Pad Air 2) டேப்லெட்டுடன் அறிமுகமாகும்.

வெளியான டீசர்களின் வழியாக, ஒப்போ பேட் ஏர் 2 மாடலானது, கடந்த 2023 அக்டோபரில் அறிமுகமான ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட்டை போலவே இருப்பதை அறிய முடிகிறது. பெரும்பாலும் இது ஒன்பிளஸ் பேட் கோவின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆக அறிமுகமாகலாம்.

ஆக ஒப்போ பேட் ஏர் 2-வின் விலை நிர்ணயம் ஒன்பிளஸ் பேட் கோவின் விலையுடன் ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பேட் கோவின் வைஃபை ஒன்லி வேரியண்ட் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒப்போ பேட் ஏர் 2-விற்கு முன்னதாக வந்த ஒப்போ பேட் ஏர் டேப்லெட் ஆனது தற்போது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 11 50MP SLR Level Camera MediaTek Dimensity 8200 Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X