Home
Mobile

கேமராவில் மிரட்டும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் மற்ற ஸ்மார்ட்போன்களை விட இந்த ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கும் தனி கவனம் செலுத்தியுள்ளது.

ஒப்போ நிறுவனம் இருவித அளவுகளில் ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்துப்பட்டுள்ளது, குறிப்பாக இதற்குமுன்பு வந்த ஒப்போ போன்களை விட சற்று வித்தியசமான வடிவமைப்புகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு வந்த ஓப்போ ஆர்17, ஒப்போ பைண்டு எக்ஸ் சாதனங்களை
விட சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

கேமராவில் மிரட்டும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம்  ஸ்மார்ட்போன்.!

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் சாதனத்தில் உள்ள செயல்திறன் மற்றும் வடிவமைப்பு கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமராவுக்கும் தனி கவனம்
செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போனிகளில் இல்லாத வகையில் புதுமையான செல்பீ கேமராவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம்  வடிவமைப்பு:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் வடிவமைப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போனை கைகளில் எடுக்கும்போது எடைகுறைவுடன் சிறந்த ஸ்மார்ட்போன் உணர்வைக் கொடுக்கும், அதே சமயம் சிறந்த ஸ்டைலான அனுபவத்தையும் கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும் வகையில் உள்ளது.

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் சாதனம் மெட்டல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியையும் கொண்டுள்ளது. பின்பு முன்புற வடிவமைப்புக்கு தகுந்தபடி செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் பசுமை நிறத்தில் தற்சமயம் இந்தியாவில் வெளிவந்துள்ளது.

ஒப்போ நிறுவனம் மற்ற ஸ்மார்ட்போன்களை விட இந்த ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கும் தனி கவனம் செலுத்தியுள்ளது. அதே சமயம் மென்மையான உணர்வு கொடுக்கும் வகையில் வடிவமைப்பு, சிறந்த இயங்குதளம், இணைப்பு ஆதரவுகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அன்மையில் வெளிவந்து விவோ வி15 மற்றும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக தான் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, அதே சமயம் மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்த பாதுகாப்பு வசதி இந்த ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் சாதனத்தில் உள்ளது.

அட்டகாசமான செல்பீ கேமரா:

அட்டகாசமான செல்பீ கேமரா:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் இடம்பெற்றுள்ள செல்பீ கேமராவுக்கு ஆதரவாக மேலே கொண்டுவரும் ஒரு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பாப்-அப் செல்பீ கேமராவுக்கு மாற்றக இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு,
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ-தொழில்நுட்பம் போன்றவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள செல்பீ கேமரா மூலம் குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களை எடுக்க முடியம்.

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் சாதனத்தின் செல்பீ கேமராவை ஒரு கிளிக் செய்தால் வெறும் 0.8 வினாடிகளில் அசத்தலான புகைப்படங்களை எடுக்கும். அதே சமயம் விரைவாக புகைப்படங்களை எடுக்க அதில் உள்ள செட்டிங்ஸ் விருப்பத்தை தேர்வு செய்து மாற்றியமைத்துக் கொள்ள முடியம்.

பின்புறம் மூன்று கேமராக்கள்:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 38எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், ஏஐ-தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். புகைப்பட ஆர்வலர்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக உலகின் முதல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், அதே சமயம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டு அதிர்வெண் துல்லியத்தையும் கவனிக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவில் எச்டிஆர் வசதி மற்றும் ஏஐ-சார்ந்த இயங்கும் பல்வேறு சென்சார்கள் உள்ளது. குறிப்பாக 4கே வீடியோ பதிவு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் வீடியோக்களை
இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். பின்பு அல்ட்ரா நைட் மோட் 2.0 ஆதரவு உள்ளதால் இரவு நேரங்களில் கூட மிகத்துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் சிறப்பம்சங்கள்:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் சிறப்பம்சங்கள்:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் உடன் அட்ரினோ 640ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 6ஜிபி /8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 4065எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகுவம் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கலர் ஒஎஸ் 6.0 மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில்
இந்த ஸ்மார்ட்போன் அதிக பிரபலமாகி இருக்கிறது.

மேலும் டிவிட்டர் பக்கங்களில் இந்த ஸ்மார்ட்போனுக்கு அதிக விமர்சனங்கள் கிடைத்துள்ளது, அதே சமயம் இந்த
ஸ்மார்ட்போனின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி
உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 10எக்ஸ் சூம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
oppo-reno-10x-zoom-perfect-blend-of-style-and-performance : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X