சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் புதிய ஒப்போ போன்.! என்னென்ன அம்சங்கள்.!
விவோ, மோட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு போட்டியாக ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம்செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ரெனோ 10
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ரெனோ 10 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போன் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு கொண்டு வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ ரெனோ 10 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 10 அம்சங்கள்
இந்த புதிய ஒப்போ ரேனோ 10 ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக OLED டிஸ்பிளே
ஆனது சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
ஒப்போ ரெனோ 10 ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி கேமரா சென்சார் வசதி உள்ளது. அதேபோல் டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டு இந்த போன்
அறிமுகமாகும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
அதேபோல் ஒப்போ ரெனோ 10 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 8டி 5ஜி
ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் micro-curved AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2412 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை வழங்கும். பின்பு ColorOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சாரஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன். இந்தியாவில் ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.29,999-க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications