Home
Mobile

Oppo ரெனோ 10 சீரிஸ் கேமரா எப்படி இருக்கு? அதை இந்த பிரபல இயக்குநர் கிட்ட கேளுங்க.. அறிமுக தேதி வெளியானது.!

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 10 சீரிஸ் மாடல்களின் அறிமுகத் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய ஒப்போ போன்கள் வரும் ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ 10, ஒப்போ ரெனோ 10 ப்ரோ, ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை தான் ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்த மூன்று போன்களும் சிறந்த வடிவமைப்புடன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Oppo ரெனோ 10 சீரிஸ் கேமரா எப்படி இருக்கு?  அறிமுக தேதி வெளியானது.!

தற்போது வெளியான தகவலின்படி, ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போன் ஆனது 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 100 வாட்ஸ் SUPERVOOCTM Flash சார்ஜ் ஆதரவுடன் இந்த ப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை வெறும் 10 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது.

அதேபோல் ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும். பின்பு இதில் 80 வாட்ஸ் SUPERVOOCTM சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ போனை 28 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். மேலும் ஒப்ரோ ரெனோ 10 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஒப்ரோ ரெனோ 10 போனை 47 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.

Oppo ரெனோ 10 சீரிஸ் கேமரா எப்படி இருக்கு?  அறிமுக தேதி வெளியானது.!

ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ்: ஏற்கனவே வெளியான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் 4என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 730 ஜிபியு ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதேபோல் 5ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஒப்போ அறிமுகம் செய்ய இருக்கும் ஒப்போ ரெனோ 10 சீரிஸ் மாடல்களின் விளம்பர தூதராகி இருக்கிறார் பிரபல இயக்குநர் ராஜமவுலி. எனவே இந்தியச் சந்தையில் இந்த போன்களுக்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒப்போ ரெனோ 10 5ஜி போன் ரூ.30,000-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒப்ரோ ரெனோ 10 ப்ரோ ரூ.40,000 விலையிலும், ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ரூ.50,000 விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 10 series will be launched in India on July 10: Check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X