ஒன்பிளஸ் போன் வாங்குற ஆசை இருக்கா.. இந்த 3 புது OPPO போன்களை பார்த்தா.. அந்த ஆசை காணாம போயிடும்!
வருகிற ஜூலை 5 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி என்கிற 2 புதிய நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதில் ஒன்றை வாங்கலாம் என்கிற ஆசை உங்களிடம் இருந்தாலும் சரி..
அல்லது ஏற்கனவே அறிமுகமான ஒன்பிளஸ் 11 அல்லது அதே ஒன்பிளஸ் 11-ன் ஸ்பேஸ் ஒடிஸி ஸ்பெஷல் எடிஷனை வாங்கலாம் என்கிற யோசனையில் இருந்தாலும் சரி.. உங்களது நிலைப்பாட்டில் கொஞ்சம் உறுதியாக இருக்க முயற்சிக்கவும். ஏனென்றால் இந்தியாவிற்கு வரும் 3 ஒப்போ (Oppo) ஸ்மார்ட்போன்களும் அப்படி!

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? ஒப்போ நிறுவனமானது அதன் ரெனோ 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. இதன் கீழ் ரெனோ 10 5ஜி (Reno 10 5G), ரெனோ 10 ப்ரோ 5ஜி (Reno 10 Pro 5G), ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி (Reno 10 Pro Plus 5G) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.
ஒப்போ VS ஒன்பிளஸ்: இம்மூன்று ஸ்மார்ட்போன்களுமே வேறுபட்ட அம்சங்களுடன், வெவ்வேறு வகையான விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும் என்பதால், இவைகள் ஒன்பிளஸின் பிரீமியம் / பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி மிட்-ரேன்ஜ் விலையில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் மாடல்களின் விற்பனையையும் சேர்த்தே சரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஒப்போ ரெனோ 10 சீரிஸில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒப்போ நிறுவனமானது ரெனோ 10 சீரீஸின் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி "அவசரப்பட்டு வேற எந்த போனையும் வாங்கிடாதீங்க!" என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது. ஒப்போ ரெனோ 10 சீரீஸின் கீழ் வரும் 2 ப்ரோ மாடல்களுமே டெலிஃபோட்டோ ரியர் கேமராவை (Telephoto Rear Camera) கொண்டிருக்கும்.
குறிப்பாக ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் (3x Optical Zoom Support) புதிய பெரிஸ்கோப் லென்ஸுடன் (Persicope Lens) வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்போவின் கூற்றுப்படி, இது மென்மையான பொக்கே பேக்கிரவுண்ட்டை வழங்கும்; போர்ட்ரெயிட் புகைப்படங்களின் போது தொலைதூரத்தில் உள்ள மலைகள், கட்டிடங்கள் போன்றவைகளை சற்றே நெருக்கமாக கொண்டு வரும்.
ரெனோ 10 ப்ரோ பிளஸில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்: வழக்கமாக பெரிஸ்கோப் லென்ஸ் உடன் வரும் போன்கள் சற்றே தடினமான கேமரா பம்ப்பை வழங்கும். அதை தவிர்க்க ப்ரோ பிளஸ் மாடலில் அடுக்கப்பட்ட லென்ஸ் மற்றும் பக்கவாட்டாக திருப்பப்பட்ட சென்சார் உள்ளன. இதன் மூலம் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஆனது மற்ற போன்களை விட 0.96 மிமீ மெல்லிய பெரிஸ்கோப் மாட்யூலை கொண்டுருக்கும்.
கேமரா சென்சார்களை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 10 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே 64எம்பி டெலிஃபோட்டோ கேமராவை பேக் செய்யும். ஒப்போவின் கூற்றுப்படி, இது தொழில்துறையின் மிக உயர்ந்த மெகாபிக்சலை கொண்ட டெலிஃபோட்டோ போர்ட்ரெய்ட் கேமராவாகும்.
இது 1/2-இன்ச் இமேஜ் சென்சார் மூலம் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மூலம் போர்ட்ரெய்ட் புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. மேலும் இந்த சென்சார் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனையும் (Optical image stabilization) கொண்டுள்ளது. மெயின் கேமராவை பொறுத்தவரை, சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சாரை கொண்ட 50-மெகாபிக்சல் சென்சார் இடம்பெறும்.
இது அதிக அளவிலான ஒளி உட்கொள்ளலுக்கான 1/1.56-இன்ச் அல்ட்ரா-லார்ஜ் சென்சார் சைஸை கொண்டுள்ளது. மேலும் இது ஐஓஎஸ் மற்றும் ஆல்-பிக்சல் ஆம்னிடைரக்ஷனல் ஃபோகஸ் (All-pixel omnidirectional focus) ஆகியவற்றையும் ஆதரிக்கிறது. 50எம்பி மெயின் கேமராவுடன் 8-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாரும் உள்ளது, இது 1/4-இன்ச் சென்சாரை கொண்ட 112-டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவாகும்.
முன்பக்கத்தை பொறுத்தவரை, ஆட்டோ ஃபோகஸ் உடனான 32-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் பேக் செய்யப்படும். மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm இன் Snapdragon 8+ Gen 1) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
பிளிப்கார்ட்டில் (Flipkart) வெளியான டீஸர்களை வைத்து பார்க்கும்போது, புதிய ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களானது மெலிதான மற்றும் பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும். இது இந்தியாவில் 2 வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இருப்பினும் இந்த போன்கள் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications