Home
Mobile

வேற லெவல் டிசைன்.! இந்தியாவுக்கு வருகிறது தரமான OPPO 5ஜி ஸ்மார்ட்போன்.! ரெடியா இருங்க..

சமீபத்தில் ஒப்போ நிறுவனம் சீனாவில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போனுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒப்போ.

அதாவது வரும் ஜூலை மாதம் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வேற லெவல் டிசைன்.! இந்தியாவுக்கு வருகிறது தரமான ஒப்போ 5ஜி போன்.!

ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குறுகிய பெசல்கள், வளைந்த டிஸ்பிளே மற்றும் பஞ்ச்-ஹோல் கட்அவுட் வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு இந்த போனின் இடதுபுறம் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த போனின் பின்புறம் வித்தியாசமான கேமரா வடிவமைப்பு மற்றும் லோகோவும் உள்ளது. மேலும் இந்த போன் என்னென்ன அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை இப்போது பார்ப்போம்

அதாவது ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:1:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1.09 பில்லியன் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

வேற லெவல் டிசைன்.! இந்தியாவுக்கு வருகிறது தரமான ஒப்போ 5ஜி போன்.!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 சிப்செட் உடன் அட்ரினோ 730 ஜிபியு ஆதரவைக் கொண்டு இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக ColorOS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ போன். பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

வேற லெவல் டிசைன்.! இந்தியாவுக்கு வருகிறது தரமான ஒப்போ 5ஜி போன்.!

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 5ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் தான் இந்த புதிய ஒப்போ போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 10 Pro smartphone will be launched in India on July : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X