கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணுங்க! வரப்போகுது OPPO-வின் பிரமாண்ட 5ஜி போன்.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ரெனோ 10, ரெனோ 10 ப்ரோ, ரெனோ 10 ப்ரோ பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை வரும் மே 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்கள் மற்றும் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் மே 24-ம் இந்த புதிய ஒப்போ போன்கள் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதற்கு பிறகு தான் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் 4என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 730 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 5ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்.

கருப்ப, ஊதா மற்றும் தங்க நிறங்களில் இந்த புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போன் குறைந்த எடையில் வெளிவரும். அதேபோல் இந்த புதிய போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








