Home
Mobile

இப்படியொரு 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன OPPO.!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்ரோ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இணையத்தில் வெளிவந்த தகவலின்படி அடுத்த மாதம் துவக்கத்தில் இந்த ஒப்ரோ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது இந்த போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி தனித்துவமான கேமரா அமைப்பு, வளைந்த டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இப்படியொரு 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன OPPO

ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் 4என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 730 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

இப்படியொரு 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன OPPO

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

4700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 5ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்.

இப்படியொரு 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன OPPO

கருப்பு, ஊதா மற்றும் தங்க நிறங்களில் இந்த புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போன் குறைந்த எடையில் வெளிவரும். அதேபோல் மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அருமையான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஆனால் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஆனது சற்று உயர்வான விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 10 Pro Plus smartphone will be launched in India in early July : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X