வாங்குனா இப்படி ஒரு கேமரா ஸ்மார்ட்போன் வாங்கணும்.! நல்ல செய்தி சொன்ன OPPO.!
விவோ, சியோமி நிறுவனங்களுக்குப் போட்டியாக பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது ஒப்போ நிறுவனம். குறிப்பாக ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்த போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஒப்போ ரெனோ 10 ப்ரோ போனின் புகைப்படங்கள் தற்போது ஆன்லைனில் வெளியானது.

குறிப்பாக இந்த புதிய ஒப்போ போன் தனித்துவமான கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் மேம்பட்ட செயல்திறன் கொண்ட சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாப் பார்ப்போம்.
அதாவது 6.7-இன்ச் ஒஎல்இடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் Dimensity 8200 பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் micro-curved AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2412 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை வழங்கும். பின்பு ColorOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ
ரெனோ ஸ்மார்ட்போன்.
ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் கோல்டு நிறங்களில் இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சாரஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஒப்போ போனை 45 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் செய்துவிட முடியும் என ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது.
photo courtesy: @ONLEAKS x @MYSMARTPRICE


Click it and Unblock the Notifications








