Home
Mobile

மார்க்கெட்டை தலைகீழா திருப்பி போடப்போகும் Oppo-வின் புது தயாரிப்பு.! விலை மற்றும் அம்சங்கள் வெளியானது..

ஒப்போ நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. தற்போது ஒன்பிளஸ் போன்களை விட ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ரெனோ 10 சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒப்போ ரெனோ 10, ஒப்போ ரெனோ 10 ப்ரோ, ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம். இந்த மூன்று போன்களும் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவரும்.

மார்க்கெட்டை தலைகீழா திருப்பி போடப்போகும் Oppo-வின் புது தயாரிப்பு.!

இப்போது ஆன்லைனில் இந்த மூன்று போன்களின் விலைப் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஒப்போ ரெனோ 10 5ஜி போன் ரூ.30,000-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒப்ரோ ரெனோ 10 ப்ரோ ரூ.40,000 விலையிலும், ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ரூ.50,000 விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் மற்ற நிறுவனங்களின் போன்களை விட இந்த ஒப்போ போன்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும்.

குறிப்பாக ஒப்போ ரெனோ 10 சீரிஸ் வெளியீட்டுத் தேதியை இன்னும் வெளியிடவில்லை ஒப்போ நிறுவனம். இருந்தபோதிலும் இந்த ஜூலை மாத இறுதிக்குள் இந்த மூன்று போன்களும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. பின்பு பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ தளங்களில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்கெட்டை தலைகீழா திருப்பி போடப்போகும் Oppo-வின் புது தயாரிப்பு.!

அதன்படி இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் 4என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 730 ஜிபியு ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதன் சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மார்க்கெட்டை தலைகீழா திருப்பி போடப்போகும் Oppo-வின் புது தயாரிப்பு.!

4700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு அறிமுகமாகும் இந்த புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல். அதேபோல் 5ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ்,புளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 10 5G Series to Launch in India Soon: Price Details Revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X