Home
Mobile

6ஜிபி ரேம், 13+8 எம்பி ஏஐ கேமரா உடன் ஒப்போ ரியல்மீ 1; வெறும் ரூ.8,990/- முதல்.!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒப்போ, இன்று அதன் துணை பிராண்ட் ஆன ரியல்மீ (Realme) வரிசையின் கீழ், ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

By Muthuraj

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒப்போ, இன்று அதன் துணை பிராண்ட் ஆன ரியல்மீ (Realme) வரிசையின் கீழ், ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மீ 1 என்கிற (Realme 1) பெயரைக்கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதன் வடிவமைப்பை பார்த்தல், இது ஒரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள்.

ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் வெளியீடானது, ரூ.15,000/-க்குள் கிடைக்கும் அத்துணை ஸ்மார்ட்போன்களையும் ஒரு வழி செய்து விடும் என்பது போன்றே தெரிகிறது. அதன் அம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

டிஸ்பிளே.!

டிஸ்பிளே.!

அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 1 ஆனது, 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சு கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.

128 ஜிபி வரை.!

128 ஜிபி வரை.!

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் போன்ற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது. மூன்றிலுமே, 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. ரியல்மீ 1 ஆனது, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத்தள்ளும் வண்ணம் (செயல்திறன் அடிப்படையில்), ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

பேட்டரி.!

பேட்டரி.!

ஒரு 3410mAh பேட்டரி மூலம் எரியூட்டப்படும் ரியல்மீ 1 ஆனது, அதன் நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அதற்கு ஸ்மார்ட்போனின் ஏஐ பேட்டரி மேலாண்மை துணைபுரியும். ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான கலர் ஓஎஸ் 5.0 கொண்டு இயங்கும் ரியல்மீ 1 ஆனது நிறுவனத்திற்கே உரிய சிறப்பானதொரு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் திறன்.!

296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் திறன்.!

ஒளியியல் துறையை பொறுத்தவரை, ரியல்மீ ஒரு 13 எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் பெரும்பாலான கேமராக்களில் இருப்பது போன்றே, இதிலும் buzzword AI பயன்படுத்தப்படுகிறது. உடன் முன் பக்கம் மற்றும் பின்புற கேமராக்களில் ஏஐ ஸ்டிக்கர் அம்சமும் இடம்பெறும். உடன் ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஆனது 296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் திறன் கொண்டதாகவும் கூறமுடிகிறது.

ஃபேஸ் அன்லாக் அம்சம்.!

ஃபேஸ் அன்லாக் அம்சம்.!

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்றே, எச்டிஆர், விவி மோட் மற்றும் பொக்கே விளைவுகளை வழங்கும் கேமராக்களை கொண்டிருந்தாலும் கூட, ரியல்மீ 1-ல் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது ஒரு குறை தான். ஆனால் அதை ஈடுகட்டும் வண்ணம் ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இது பயோமெட்ரிக் சென்சார் இல்லாமையை எப்படி சரிசெய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விலை.!

விலை.!

ரியல்மீ 1 ஸ்மார்ட்போன், மொத்தம் இரண்டு வண்ண விருப்பங்கள் கிடைக்கும். ஒன்று டயமண்ட் பிளாக் ஒன்று, மற்றொன்று சூரிய சிவப்பு நிறம் ஆகும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது (அடிப்படை மாறுபாடு) வெறும் ரூ.8,990/-க்கும், ஹை எண்ட் மாடல் ஆன 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு (பிரீமியம்) ஆனது இந்தியாவில் ரூ.13,990/-க்கும், நடுநிலை மாடல் ஆன 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடல் ஆனது ரூ.10,990/-க்கும் வாங்க கிடைக்கும். இந்த அனைத்து மாடல்களும், அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Oppo Realme 1 Smartphone With Dual 4G Support Launched, Prices Start at Rs 8,990. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X