ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன்: ஒரு கண்ணோட்டம்.!

|

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் 3ஜிபி + 32ஜிபி நினைவகம் கொண்ட வகையின் துவக்க விலையாக ரூ.8,999 என்றும், 6ஜிபி + 128ஜிபி கொண்ட வகை ரூ.13,999 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்7 உடன் வடிவமைப்பில் சில அழகியல் மாற்றங்களைச் செய்து, இந்நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் வரிசையில் ரியல்மீ 1 வெளியிடப்பட்டுள்ளது. ரியல்மீ 1-னின் முழு திரையில் ஒரு நாட்ச்சை இணைத்தால், மேற்கூறிய இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையிலான வேறுபாட்டை கண்டறிவது கடினம். இதன் பின்பக்க பேனல் பிளஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்டல் சாதனத்தின் மீது கிளாஸ் பணி முழுமையை விரும்புவோருக்காக, டைமண்டு பிளாக் வடிவமைப்பில் சஃப்பாரின் பெற்றுள்ளது. சோலர் ரெட் நிறம் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

ரியல்மீ 1 பின்பக்க கவர், 12 அடுக்கு நானோடெக் கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஒரு மின்னும் தன்மை கிடைப்பதோடு ஆடம்பரமான தோற்றத்தையும் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஒளிர்வு அதிகமாக இருப்பதால், அதன் பேட்டரி திறன் குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. இதில் உள்ள பாலிஷ் செய்யப்பட்ட பிரேம், 7 அடுக்குகளைக் கொண்டு ஒற்றை உடலாக அமைக்கப்பட்டு, பிறகு தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ரியல்மீ 1 இல் உள்ள 6 இன்ச் எஃப்ஹெச்டி+ ஐபிஎஸ் திரை, அறையின் உட்புறத்தில் வெளிச்சமாக உள்ளது. ஆனால் நிறங்கள் சொல்லும் அளவிற்கு இருப்பதாக தெரியவில்லை. தொடுதலுக்கான மறுமொழி சிறப்பாக உள்ளது. இதில் ஸ்கிரீன் மற்றும் பாடி இடையிலான விகிதம் ஏறக்குறைய 85% உள்ளதால், அதிவேகமான வீடியோ ப்ளேபேக், பன்முக பணியாற்றல் மற்றும் கேம்மிங் அனுபவம் ஆகியவை சிறப்பாக உள்ளது.

கேமரா:

கேமரா:

ரியல்மீ 1 இல் எஃப்/2.2 துளையை பயன்படுத்தி எல்இடி பிளாஷ் உடன் இயங்கக் கூடிய 13எம்பி பின்பக்க கேமரா காணப்படுகிறது. முன்பக்கத்தில் எஃப்/2.2 துளை லென்ஸ் உடன் கூடிய 8 எம்பி கேமரா உள்ளது. மீடியாடிக்-கின் ஹீலியோ பி60 நியூரோபைலட் ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கேமராக்களில், ஆழமான முறையில் முகம் கண்டறியும் தன்மை, பொருள் மற்றும் காட்சியை கண்டறியும் திறன் ஆகியவற்றை பெற்றுள்ளது. இதில் உள்ள ஏஐ ஷாட் மூலம் 296 முகப் புள்ளிகளை படம்பிடித்து, முகத்தை பகுதிகளாக பிரித்து, படத்தின் அழகை மெருகேற்றுகிறது. குழு செல்ஃபீகளை எடுக்கும் போது, முன்பக்க கேமரா அழகுப்படுத்தும் திறனை வெளிப்படுத்துவது ஒரு சுவாரஸ்சியமான அம்சம் ஆகும். மேலும் முன்பக்க மற்றும் பின்பக்க படங்களிலும் வீடியோ பதிவு செய்யவும், ஏஆர் ஸ்டிக்கர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

13எம்பி பின்பக்க கேமராவில் உள்ள ஏஐ காட்சி அங்கீகாரம் மூலம் வெவ்வேறு காட்சிகள் மற்றும் பொருட்களை, திறமையாகவும் கச்சிதமாகவும் கண்டறிய முடிகிறது.

ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்

ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்

உலகிலேயே முதல் 12என்எம் ஏஐ சிபியூ ஆன மீடியாடெக் ஹீலியோ பி60 சிபியூ, 12என்எம் பின்எஃப்இடி தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மற்ற சாதனங்கள் உடன் ஒப்பிட்டால், இது 50 % வேகமாக செயல்படும் ஆற்றல் கொண்ட சிபியூ என்று ஒப்போ தெரிவித்துள்ளது. இந்தச் செயலி 3ஜிபி, 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் ஆகிய வகைகளுடன் இணைந்து செயலாற்றி, பன்முக பணிகளைச் செயல்படுத்த உதவுகிறது. 6ஜிபி ரேம் வகை, 128ஜிபி உள்ளக நினைவகத்தையும், மைக்ரோஎஸ்டி மூலம் அதை 256ஜிபி ஆக விரிவுப்படுத்தவும் முடியும். இது ரூ.13,999 என்ற விலை நிர்ணயத்தில் கிடைப்பது நுகர்வோருக்கு லாபகரமானது ஆகும்.

சாஃப்ட்வேரை பொறுத்த வரை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எஃப்7 இல் உள்ள அதே கலர் ஓஎஸ் காணப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையில் அமைந்த கலர்ஓஎஸ் 5.0 இல் இயங்குகிறது.

விலைக் குறைப்பு நடவடிக்கையாக, கைரேகை ஸ்கேன்னர் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் முகம் கண்டறிந்து அன்லாக் செய்யும் தொழில்நுட்பம் உள்ளது. இதை பயன்படுத்தி குறைந்த ஒளியிலும் 0.1 நொடியில் ஃபோனை திறக்கலாம்.

பேட்டரி

பேட்டரி

ஒப்போ ரியல்மீ 1-யை 3,410எம்ஏஹெச் பேட்டரி இயக்குகிறது. ஏஐ பேட்டரி நிர்வாக அம்சத்தின் உதவியைப் பெற்று, நீண்ட மற்றும் அதிக பயன்பாடு மூலம் செயல்பாட்டில் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.

கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் மூன்று பதிப்புகளில் கிடைக்கிறது. 3ஜிபி ரேம் + 32ஜிபி ரோம் கொண்டு, டைமண்டு பிளாக் மற்றும் சோலார் ரெட் ஆகிய நிற வகைகளில் ரூ.8,999 என்ற விலை நிர்ணயத்தில் ஒரு பதிப்பு கிடைக்கிறது. இந்த மாதம் 25 (மே, 2018) ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறது. 4ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் கொண்டு, மூன்லைட் சில்வர் மற்றும் டைமண்டு பிளாக் ஆகிய நிற வகைகளில் வரும் பதிப்பு, ரூ.10,999 என்ற விலை நிர்ணயத்தில் வரும் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வரும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் கொண்டு, ரூ.13,999 என்ற விலை நிர்ணயத்தில் டைமண்டு பிளாக் மற்றும் சோலார் ரெட் ஆகிய நிற வகைகளில் வரும் 25 ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

ரியல்மீ 1 ஸ்மார்ட்போனை Amazon.in இல் வாங்கினால், இஎம்ஐ கட்டணம் எதுவும் இல்லை. எஸ்பிஐ கார்டு உள்ளவர்களுக்கு 5% பணம் திரும்ப கிடைக்கும். மேலும் ஜியோ வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில், ரூ.4850 பணத்தை திரும்ப பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்தால், அமேசான் பிரைம் பிரிவில் இருந்து பட்டுவாடா செய்யப்படும்.

முடிவு

முடிவு

தற்போதைய இந்திய ஆன்லைன் ஸ்மார்ட்போன் சந்தையில், நடுத்தர பிரிமியம் பிரிவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன்களைக் குறைந்த விலையில் வெளியிடும் முயற்சியாக, ரியல்மீ பிராண்டை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, இளம் ஆன்லைன் நுகர்வோரை கருத்தில் கொண்டு, அட்டகாசமான விலை நிர்ணயம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு, சிறந்த ரேம் - ரோம் ஒருங்கிணைப்பு மற்றும் ஏஐ திறனின் சில படிகள் போன்ற பல்வேறு காரியங்களை ரியல்மீ 1 இல் உட்படுத்தி, ஒப்போ களமிறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OPPO Realme 1 Smartphone First Impressions ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X