மனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.!
பிரபல இ-காமர்ஸ் வலைதளமான அமேசான் இந்தியா வழியாக இன்று 12 மணி முதல் வாங்க கிடைக்கும்
சியோமி ரெட்மீ நோட் 5 மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை எதிர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள ஒப்போ நிறுவனத்தின் புதிய பிராண்ட் ஆன ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் உள்பட சேமிப்பு மாடல் இன்று முதல் அதன் இந்திய விற்பனையை தொடங்கியுள்ளது.
பிரபல இ-காமர்ஸ் வலைதளமான அமேசான் இந்தியா வழியாக இன்று 12 மணி முதல் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது - டயமண்ட் பிளாக், சோலார் ரெட் மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட வெர்ஷன் ஆன மூன்லைட் சில்வர் உள்ளிட்ட - மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும்.!
கடந்த மாதம், அறிமுகமான இந்த ரியல்மீ 1 ஆனது ஆன்லைன் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் என்பதும், இது அமேசான் வழியாக பிரத்தியேக விற்பனைக்கு வரும் ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்ட புதிய ஒப்போ ரியல்மீ சில்வர் மாறுபாட்டின் விலை ரூ.10.990/- ஆகும். இதனுடன் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு மாடலும் வாங்க கிடைக்கும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.!
மூன்லைட் சில்வர் தவிர்த்து, ரியல்மீ 1 ஸ்மார்ட்போன், மொத்தம் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஒன்று டயமண்ட் பிளாக் ஒன்று, மற்றொன்று சன் ரெட் ஆகும். அவைகளின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது (அடிப்படை மாறுபாடு) வெறும் ரூ.8,990/-க்கும், ஹை எண்ட் மாடல் ஆன 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு (பிரீமியம்) ஆனது இந்தியாவில் ரூ.13,990/-க்கும், நடுநிலை மாடல் ஆன 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடல் ஆனது ரூ.10,990/-க்கும் வாங்க கிடைக்கும்.

6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே.!
அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 1 ஆனது, 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சு கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.

செயல்திறன் அடிப்படையில்.!
4ஜி + 64 ஜிபி மாடல் தவிர 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு என மொத்தம் மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது. மூன்றிலுமே, 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. ரியல்மீ 1 ஆனது, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத்தள்ளும் வண்ணம் (செயல்திறன் அடிப்படையில்), ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி.!
ஒரு 3410mAh பேட்டரி மூலம் எரியூட்டப்படும் ரியல்மீ 1 ஆனது, அதன் நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அதற்கு ஸ்மார்ட்போனின் ஏஐ பேட்டரி மேலாண்மை துணைபுரியும். ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான கலர் ஓஎஸ் 5.0 கொண்டு இயங்கும் ரியல்மீ 1 ஆனது நிறுவனத்திற்கே உரிய சிறப்பானதொரு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

விலைக்கு மீறிய கேமரா.!
ஒளியியல் துறையை பொறுத்தவரை, ரியல்மீ ஒரு 13 எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் பெரும்பாலான கேமராக்களில் இருப்பது போன்றே, இதிலும் buzzword AI பயன்படுத்தப்படுகிறது. உடன் முன் பக்கம் மற்றும் பின்புற கேமராக்களில் ஏஐ ஸ்டிக்கர் அம்சமும் இடம்பெறும். உடன் ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஆனது 296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் திறன் கொண்டதாகவும் கூறமுடிகிறது.

ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.!
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்றே, எச்டிஆர், விவி மோட் மற்றும் பொக்கே விளைவுகளை வழங்கும் கேமராக்களை கொண்டிருந்தாலும் கூட, ரியல்மீ 1-ல் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது ஒரு குறை தான். ஆனால் அதை ஈடுகட்டும் வண்ணம் ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இது பயோமெட்ரிக் சென்சார் இல்லாமையை எப்படி சரிசெய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications